தில்லியில் பாஜகவின் ஆதரவு அணியாக செயல்பட்டது காங்கிரஸ்: ராகுலுக்கு மாயாவதி பதிலட...
Rohit Sharma : 'கேட்ச்சை விட்டதுக்கு தண்டனையா அக்சரை டின்னர் கூட்டிட்டு போறேன்' - ஜாலி ரோஹித்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டிருந்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். கில் சதம் அடித்திருந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா அக்சரின் ஹாட்ரிக் வாய்ப்பின் போது டிராப் செய்த கேட்ச்சைப் பற்றி ஜாலியாக பேசியிருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசுகையில், “தன்னம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற முடியும். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பலவிதமான உணர்ச்சிகளை வெளிபடுத்தினோம். இது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். எங்கள் அணியில் பல அனுபவசாலிகள் உடன் இருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், கில் ஆகியோர் போட்டியின் இறுதியில் தங்களுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை கரை சேர்த்திருக்கிறார்கள். மைதானத்தில் புற்கள் அதிக அளவு இல்லாததால், போட்டி செல்ல செல்ல ஒரு தொய்வு ஏற்படும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.” என்று கூறி உள்ளார்.
தொடர்ந்து முகமது ஷமி மற்றும் சுப்மன் கில் குறித்து கூறிய அவர், “ ஷமியின் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது. உலகத்தரம் வாய்ந்த வீரராக அவர் விளங்குகிறார். ஒவ்வொரு முறையும் அவரிடம் நான் பந்தை கொடுக்கும் போது எங்களுக்கு தேவையான விக்கெட்டுகளை எடுத்து தரும் பழக்கத்தை வைத்து இருக்கிறார். ஷமி போல் பௌலர்கள் எங்களுக்கு நிறைய தேவைப்படுகிறார்கள். கடந்த சில காலமாக கில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவர் குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.” என்று கூறி உள்ளார்.

8வது ஓவரில் அக்சர் படேலின் ஹாட்ரிக் வாய்ப்பின் போது ஜேக்கர் அடித்த பந்தை ரோஹித் ஷர்மா கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டார். அது குறித்தும் வெற்றிக்கு பிறகு பேசி உள்ளார் ரோஹித் ஷர்மா, "நான் ஒரு கேட்சை மிஸ் செய்ததால் அக்சர் பட்டேலுக்கு ஹாட்ரிக் சாதனை பறிபோனது. இதனால் அவரை நாளை டின்னருக்கு அழைத்து சென்று மன்னிப்பு கேட்க உள்ளேன். அந்த கேட்சை நான் கண்டிப்பாக பிடித்து இருக்க வேண்டும். நான் அந்த கேட்ச்சை பிடித்து இருந்தால் அக்சர் பட்டேலுக்கு ஹாட்ரிக் சாதனை கிடைத்து இருக்கும். நாங்கள் விளையாடியது போல வங்கதேச வீரர்களும் சிறப்பாக பார்ட்னர்ஷிப்களை அமைத்து நன்றாக விளையாடி உள்ளனர். அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மைதானம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.