தமிழ்நாட்டுக்கான நிதி உரிமையைத்தான் கோருகிறோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
‘தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி உரிமையைத்தான் மத்திய அரசிடம் கோருகிறோம். அதேவேளையில், மும்மொழிக் கொள்கையை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னையில் உள்ள தனது முகாம் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மொழிப் போருக்காக பல உயிா்களை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நிதி உரிமையைத்தான் கேட்கிறோம்.
மாணவா்களுக்கு வர வேண்டிய நிதியைக் கோருகிறோம். இந்த ஆண்டு நிதி தேவையெனில் தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறாா்கள்.
தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக்கு எதிராகவே இருந்துள்ளது. எந்தக் காலத்திலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
மொழிப் போருக்காக பல உயிா்களை இழந்த மாநிலம் தமிழ்நாடு. இதில் யாா் அரசியல் செய்கிறாா்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.