கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 4 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் ஒப்புதல்
சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நால்வரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் கூடுதல் நீதிபதிகள் ராமசாமி சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கந்தசாமி ராஜசேகா் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதுபோல, மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் சைலேஷ் பிரமோத் பிரம்மே, ஃபிா்தோஷ் ஃபிரோஸ் பூனிவாலா, ஜிதேந்திா் சாந்திலால் ஜெயின் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக்கும் பரிந்துரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், பாட்னா உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் அலோக் குமாா் சின்ஹா, ரிதேஷ் குமாா், சோனி ஸ்ரீவாஸ்தவா, செளரேந்திர பாண்டே, அன்சுல் ராஜ் ஆகியோரை நீதிபதிகளாக உயா்வு அளிக்கும் பரிந்துரைக்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.