செய்திகள் :

BanvInd : 'ஏமாற்றிய கோலி; விடாமுயற்சியுடன் சதமடித்த கில்!' - எப்படி வென்றது இந்தியா?

post image
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
Ind vs Ban

வங்கதேச அணிதான் டாஸை வென்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தனர். டாஸை தோற்றதில் ரோஹித் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாங்களே சேஸ் செய்யத்தான் நினைத்தோம் எனக் கூறி 'துபாயில் லைட்ஸூக்கு கீழ் பேட்டுக்கு பந்து நன்றாக வரும்.' என காரணமும் கூறினார். வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணிக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. ஹர்ஷித் ராணாவும் ஷமியும் வீசிய முதல் ஸ்பெல்லிலேயே 3 விக்கெட்டுகள் கிடைத்தது. காயத்துக்குப் பிறகு உண்மையிலேயே ஷமிக்கு இதுதான் கம்பேக் கேமை போன்று இருந்தது. சௌமியா சர்காரின் விக்கெட்டையும் மெஹிதி ஹசனின் விக்கெட்டையும் ஆரம்பத்திலேயே வீழ்த்திக் கொடுத்தார். கூடவே ஹர்ஷித் ராணாவும் தன் பங்குக்கு வங்கதேச கேப்டன் ஷாண்டோவின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். இந்தியாவின் இந்த அதிரடியான ஓப்பனிங்கே வங்கதேசத்துக்கு பிரச்சனையாகத்தான் இருந்தது. இவர்களின் ஸ்பெல் முடிந்த கையோடு 9 வது ஓவரில் அக்சர் வந்தார். வந்த வேகத்திலேயே அடுத்தடுத்த பந்துகளில் ஓப்பனர் தன்ஷித் ஹசனையும்ம முஸ்பிஹூர் ரஹிமையும் வீழ்த்தினார். ஹாட்ரிக் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அந்த பந்தில் ஜேக்கர் அலியின் கேட்ச்சை ரோஹித் ட்ராப் செய்தார். ஆனாலும் வங்கதேசம் தடுமாற்றமான நிலையில்தான் இருந்தது.

முதல் 10 ஓவர்களுக்குள் 39 ரன்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். 100 ரன்னுக்குள் ஆல் அவுட் ஆகிவிடுவார்கள். ஒன்சைட் மேட்ச்சாக செல்லப்போகிறது என தோன்றியது. ஆனால், இந்த சமயத்தில்தான் அணியை சரிவிலிருந்து மீட்கும் வகையில் ஹிரிதாயும் ஜேக்கர் அலியும் நல்ல கூட்டணி அமைத்தனர். ஹிரிதாய் சமீபமாக வங்கதேசத்தின் புதிய நம்பிக்கையாக மாறி வருகிறார். அதிரடியாகவும் ஆடுகிறார். பொறுப்பை முதுகில் சுமந்து பக்குவமான ஆட்டங்களையும் ஆடுகிறார்.

Hridoy

இங்கே அவர் ஆடியதெல்லாம் காலத்துக்கும் நின்று பேசும் இன்னிங்ஸ். 2013 இல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 27-5 என்ற நிலையில் இருந்த போது இறங்கி சதமடித்து 227 ரன்களை தோனி எட்ட வைத்திருப்பார். அந்த இன்னிங்ஸை ஹிரிதாயின் இன்றைய ஆட்டம் நியாபகப்படுத்தியது. அத்தனை பக்குவமாக ஆடினார். இந்தியா சார்பில் 28 ஓவர்களை ஸ்பின்னர்கள் வீசியிருந்தனர். ஹிரிதாயும் ஜேக்கர் அலியும் அவசரமே படாமல் நின்று ஆடினார். விக்கெட்தான் கையில் இல்லை. ரன்னுக்காக அவசரப்பட்டு விக்கெட்டை விட்டால் போட்டியளிக்கக்கூடிய ஸ்கோரை எட்ட முடியாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதனால் விக்கெட்டை காப்பாற்றுவதில்தான் உறுதியாக இருந்தனர். இடையில் கிட்டத்தட்ட 10 ஓவர்களுக்கு கூட பவுண்டரியே வராமல் இருந்தது. அப்போதும் அவசரப்படவில்லை. ரொம்பவே யோசித்து ஒரு சில பந்துகளைத்தான் பவுண்டரிக்களுக்கு முயன்றனர்.

Shami

ஹிரிதாய் சதத்தைக் கடந்தார் 100(118) அவருக்கு உறுதுணையாக இருந்த ஜேக்கர் அலி அரைசதத்தை கடந்தார் 68(114) இவர்களின் ஆட்டத்தால்தான் வங்கதேச அணி 228 ரன்களை எடுத்தது. ஜேக்கர் அலியின் விக்கெட்டோடு இரண்டு டெய்ல் எண்டர்களின் விக்கெட்டையும் எடுத்து 5 விக்கெட் ஹாலை எடுத்தார் ஷமி.

இந்திய அணிக்கு 229 ரன்கள் டார்கெட். சிறிய டார்கெட்தான் என்பதால் இந்திய அணி எளிதில் வென்றுவிடும் என்றே தோன்றியது. அதற்கேற்ற வகையில் நல்ல தொடக்கமும் கிடைத்தது. ரோஹித் சர்மாவும் கில்லும் பவர்ப்ளேயில் நன்றாகவே ஆடியிருந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்திருந்தனர். ரோஹித் சர்மா 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்தார். வழக்கமாக பவர்ப்ளேயில் அதிரடியாக ஆரம்பிக்கும் ரோஹித், இந்த முறை மெதுவாக இன்னிங்ஸை தொடங்கினார். முதல் சில ஓவர்களை பார்த்து ஆடிவிட்டு, அதன்பிறகே பேட்டை வீச ஆரம்பித்தார். முதலில் முஷ்டபிஜூர் ரஹ்மானை பார்த்து ஆடி லீவ் செய்தவர், பின்னர் அடுத்தடுத்த பவுண்டரிக்களை அடிக்க ஆரம்பித்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்தவர், பவர்ப்ளே முடிவதற்கு ஒரு பந்து மீதமிருந்த நிலையில் டஸ்மின் அஹமதுவின் பந்தில் அவுட் ஆனார். இதன்பிறகுதான் இந்திய அணி இன்னும் தடுமாற ஆரம்பித்தது.

கில் ஆரம்பத்திலிருந்தே மிக தெளிவாக இருந்தார். கடைசி வரை நின்று பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம். ஆனால், இன்னொரு முனையில் கோலி அதற்கேற்ற வகையில் ஆடவில்லை. கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறினார். மெஹிதி ஹசன், ரிஷாத் ஹூசைன் இருவரையுமே அவர் சௌகரியமாக ஆடவில்லை. தடுமாறி நிறைய டாட்கள் ஆடினார். இதனால் இந்திய அணி முன்னேறும் வேகம் மட்டுப்பட்டது. இறுதியில் 38 பந்துகளில் 22 ரன்களை மட்டுமே எடுத்து ரிஷாத் ஹொசைனின் பந்திலேயே அரைகுறை ஷாட் ஆடி அவுட்டும் ஆனார். இதன்பிறகு வந்த ஸ்ரேயாஷ் ஐயர் கோலி ஏற்படுத்திய சேதாரத்தை ஈடுகட்ட பெரிய ஷாட்டுகளுக்கு முயன்றார். அதனாலயே முஷ்டபிஜூரின் பந்தில் 15 ரன்களில் அவுட்டும் ஆனார். அக்சர் படேலை ரிஷாத் ஹொசைன் வீழ்த்தினர். இந்திய அணியின் மீது கொஞ்சம் அழுத்தம் ஏறியது. ஆனால், ஒரு முனையில் விக்கெட்டை காத்து நின்ற கில் காப்பாற்றிவிட்டார். கில்லோடு ராகுல் கூட்டணி சேர்ந்து நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார். கில்லின் டெஸ்ட் பார்மை மனதில் வைத்து அவரை ஓடிஐ அணியில் எடுத்ததற்கும் பலரும் விமர்சித்திருந்தார்கள்.

ஆனால், ஓடிஐ யில் கில்லின் ரெக்கார்ட் கெட்டியாக இருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவும் அட்டகாசமாக ஆடியிருந்தார். இங்கேயும் அதே பார்மை தொடர்ந்தார். பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பது மட்டும்தான் அவரின் ஒரே எண்ணமாக இருக்கிறது. அதனால் வேறெதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் நின்று ஆடுகிறார். டிபன்ஸில் வலுவாக இருக்கிறார். அதுதான் கில்லின் பலம். இன்றும் அப்படி ஆடித்தான் மேட்ச் வின்னிங் சதத்தை அடித்திருக்கிறார். கில் - ராகுல் கூட்டணி அழுத்தத்தையெல்லாம் போக்கி 46.3 ஓவர்களில் சேஸை முடித்தது. கில் 129 பந்துகளில் 101ரன்களை எடுத்திருந்தார்.

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியையும் வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது. அடுத்து பாகிஸ்தானுடன் முக்கியமான போட்டியில் இந்திய அணி ஆடவிருக்கிறது.

Rohit Sharma : 'கேட்ச்சை விட்டதுக்கு தண்டனையா அக்சரை டின்னர் கூட்டிட்டு போறேன்' - ஜாலி ரோஹித்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டிருந்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட... மேலும் பார்க்க

IPL 2025 : 'CSK க்கு முதல் போட்டியே மும்பையோடு!' - வெளியானது ஐ.பி.எல் அட்டவணை!

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் இன் 18 வது சீசன் மே 25 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.MI Matchesஇந்த சீசனின் முதல்... மேலும் பார்க்க

WPL : 'ஆர்ப்பரிக்கும் 5 அணிகள்; களமிறங்கும் சிங்கப்பெண்கள்!' - WPL Season 3 முழு விவரம்

WPL Season 3இந்திய மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) 2025 போட்டிகள், பிப்ரவரி 14-ம் தேதி, அதாவது இன்று முதல் குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது. மும்பை, பெங்களூரு போன்ற நகர... மேலும் பார்க்க

Rajat Patidar : 'Unsold' வீரர் டு ஆர்சிபியின் கேப்டன்! - எப்படி சாதித்தார் ரஜத் பட்டிதர்?

ஐ.பி.எல் இல் ரஜத் பட்டிதரை தங்களின் புதிய கேப்டனாக அறிவித்திருக்கிறது பெங்களூரு அணி. ரஜத் பட்டிதர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் 'Unsold' ஆன வீரர். பெங்களூரு அணி கூட அவர் மீது விருப்... மேலும் பார்க்க

RCB : 'கப் ஜெயிக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணுவோம்!' - ரஜத் பட்டிதர் உறுதி

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய கேப்டனை அறிவிக்கும் நிகழ்ச்சியை பெங்களூருவில் நடத்தியிருந்தார்கள். அறிவிப்புக்கு பின் பெங்களூரு அணியின் புதிய கேப்டன... மேலும் பார்க்க

RCB : 'கோலியை ஏன் கேப்டன் ஆக்கவில்லை?' - ஆர்சிபி விளக்கம்

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பெங்களூரு அணியின் ரசிகர்கள் கோலியே அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கோலிக்கு பத... மேலும் பார்க்க