செய்திகள் :

Rajat Patidar : 'Unsold' வீரர் டு ஆர்சிபியின் கேப்டன்! - எப்படி சாதித்தார் ரஜத் பட்டிதர்?

post image
ஐ.பி.எல் இல் ரஜத் பட்டிதரை தங்களின் புதிய கேப்டனாக அறிவித்திருக்கிறது பெங்களூரு அணி. ரஜத் பட்டிதர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் 'Unsold' ஆன வீரர். பெங்களூரு அணி கூட அவர் மீது விருப்பம் காட்டாமல் இருந்தது. அப்படியொரு நிலையிலிருந்து ரஜத் பட்டிதர் பெங்களூரு அணியின் கேப்டனாக மாறியிருப்பது ஆச்சர்யமான விஷயம்.
விராட் கோலி | Virat Kohli

பெங்களூரு அணியை இதுவரை 7 கேப்டன்கள் வழிநடத்தியிருக்கின்றனர். விராட் கோலிதான் நீண்ட நாட்களுக்கு பெங்களுரு அணியின் கேப்டனாக இருந்தார். 2013 லிருந்து 2021 சீசன் வரைக்கும் விராட் கோலிதான் கேப்டனாக இருந்தார். அதன்பிறகு, விராட் கோலி தாமாகவே முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன்பிறகு, மெகா ஏலத்தில் பாப் டூ ப்ளெஸ்சிஸை வாங்கி வந்து அவரை கேப்டன் ஆக்கியிருந்தார்கள். கடந்த மூன்று சீசன்களாக அவர்தான் அணியை வழிநடத்தினார். கடந்த சீசனில் பெங்களூரு அணி ப்ளே ஆப்ஸ் வரை முன்னேறியிருந்தது. டூ ப்ளெஸ்சிஸின் வயது காரணமாக அவரை பெங்களூரு அணி தக்கவைக்காமல் போனது. அதேநேரத்தில் மெகா ஏலத்திலும் பெங்களூரு அணி கேப்டன் என்கிற ஆப்சனை மனதில் வைத்து எந்த வீரரையும் எடுக்கவில்லை. ஆக, ஏற்கனவே அணியில் இருக்கும் எதோ ஒரு வீரரைத்தான் பெங்களூரு அணி கேப்டனாக தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

விராட் கோலி, ரஜத் பட்டிதர், யாஷ் தயாள் என மூவரை பெங்களூரு அணி ஏலத்துக்கு முன்பாகவே தக்கவைத்திருந்தது. கோலி அல்லது ரஜத் பட்டிதர்தான் பெங்களூரு அணியின் கேப்டன் என்பதுதான் அனைவரின் அனுமானமாகவும் இருந்தது. எதிர்பார்த்ததை போலவே ரஜத் பட்டிதர் பெங்களூரு அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

Rajat Patidar

ரஜத் பட்டிதர் ஆர்சிபி அணியில் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடை மேற்கொண்டிருக்கிறார் என்றே குறிப்பிடலாம். 2021 சீசனில்தான் ரஜத் பட்டிதர் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்குதான் பெங்களூரு அணி அவரை வாங்கியது. கொரோனா காரணமாக இரண்டு பகுதிகளாக நடந்த அந்தத் தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே ரஜத் ஆடியிருந்தார். அடுத்த சீசனுக்கு முன்பாக விடுவிக்கப்பட்டார். 2022 சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடந்திருந்தது. அந்த மெகா ஏலத்தில் எந்த அணியும் ரஜத் பட்டிதரை சீண்டவில்லை. பெங்களூரு அணி கூட ரஜத்தை கண்டுகொள்ளவில்லை. ரஜத் 'Unsold' ஆனார். அந்த 2022 சீசனில் பெங்களூரு அணி சிசோடியா எனும் வீரரை எடுத்திருந்தது. அவருக்கு காயம் ஏற்படவே அவருக்கு பதிலாக ரீப்ளேஸ்மெண்ட் வீரராக ரஜத் பட்டிதர் உள்ளே வந்தார். ஆனால், கிடைத்த வாய்ப்பை ரஜத் கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

அதிரடி தாண்டவம்

லக்னோவுக்கு எதிரான ஒரு போட்டியில் அதிரடி தாண்டவம் ஆடி 112 ரன்களை எடுப்பார். அந்த சீசனில் 330+ ரன்களை எடுப்பார். அதன்மூலம் பெங்களூரு அணியின் நம்பிக்கைமிக்க வீரர்களில் ஒருவரானார். கடந்த சீசனில் இன்னும் சிறப்பாக ஆடினார். 5 அரைசதங்களோடு 395 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட்டும் 177 ஆக இருந்தது. சமீபத்தில் சையத் முஷ்தாக் அலி தொடரிலும் 5 அரைசதங்களோடு 428 ரன்களை எடுத்திருந்தார். அங்கேயும் ஸ்ட்ரைக் ரேட் 186. கடந்த ஓராண்டில் மட்டும் டி20 போட்டிகளில் 823 ரன்களை எடுத்திருக்கிறார்.

ரஜத் பட்டிதர்

ஸ்ட்ரைக் ரேட் 182. இது மட்டுமல்லாமல் மத்திய பிரதேச அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். சையத் முஷ்தாக் அலி தொடரில் அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். தனிப்பட்ட முறையில் ஒரு பேட்டராகவும் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஒரு கேப்டனாகவும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். அதனால்தான் பெங்களூரு அணி ரஜத்தை கேப்டனாக டிக் செய்தது.

நீண்ட காலத்துக்கான நம்பிக்கை

'நாங்கள் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கான கேப்டனை தேடவில்லை. நீண்ட காலத்திற்கான கேப்டனை தேடினோம்.' என ரஜத் பட்டிதரின் தேர்வுக்கு ஆர்சிபி அணி விளக்கம் கொடுத்திருக்கிறது. ஆக, ரஜத்தை அந்த அணி நீண்ட காலத்துக்கான நம்பிக்கையாக பார்க்கிறது.

Rajat

அதேமாதிரி, மற்ற அணிகளை விட பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருப்பது கூடுதல் அழுத்தமிக்கது. ஏனெனில், இந்த அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரை கோப்பையை வென்றதே இல்லை எனும் அழுத்தமும் இருக்கிறது. இந்த இரண்டையும் சிறப்பாக கையாண்டு அணியை சிறப்பாக வழிநடத்துவது ரஜத்துக்கு சவாலாகத்தான் இருக்கும்.!

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Rohit Sharma : 'கேட்ச்சை விட்டதுக்கு தண்டனையா அக்சரை டின்னர் கூட்டிட்டு போறேன்' - ஜாலி ரோஹித்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டிருந்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட... மேலும் பார்க்க

BanvInd : 'ஏமாற்றிய கோலி; விடாமுயற்சியுடன் சதமடித்த கில்!' - எப்படி வென்றது இந்தியா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றி... மேலும் பார்க்க

IPL 2025 : 'CSK க்கு முதல் போட்டியே மும்பையோடு!' - வெளியானது ஐ.பி.எல் அட்டவணை!

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் இன் 18 வது சீசன் மே 25 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.MI Matchesஇந்த சீசனின் முதல்... மேலும் பார்க்க

WPL : 'ஆர்ப்பரிக்கும் 5 அணிகள்; களமிறங்கும் சிங்கப்பெண்கள்!' - WPL Season 3 முழு விவரம்

WPL Season 3இந்திய மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) 2025 போட்டிகள், பிப்ரவரி 14-ம் தேதி, அதாவது இன்று முதல் குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது. மும்பை, பெங்களூரு போன்ற நகர... மேலும் பார்க்க

RCB : 'கப் ஜெயிக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணுவோம்!' - ரஜத் பட்டிதர் உறுதி

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய கேப்டனை அறிவிக்கும் நிகழ்ச்சியை பெங்களூருவில் நடத்தியிருந்தார்கள். அறிவிப்புக்கு பின் பெங்களூரு அணியின் புதிய கேப்டன... மேலும் பார்க்க

RCB : 'கோலியை ஏன் கேப்டன் ஆக்கவில்லை?' - ஆர்சிபி விளக்கம்

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பெங்களூரு அணியின் ரசிகர்கள் கோலியே அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கோலிக்கு பத... மேலும் பார்க்க