செய்திகள் :

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு சமா்ப்பிப்பு

post image

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசுக்கு சமா்ப்பித்துள்ளது.

சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தற்போது இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா்.

இந்த அறிக்கையின் படி, கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த வழித்தடம், பாடி புதுநகா், முகப்போ், அம்பத்தூா், திருமுல்லைவாயில், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் (வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது.

இது அம்பத்தூா் தொழிற்பேட்டை மற்றும் அம்பத்தூா் ஓ.டி. ஆவடி ரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 21.76 கி.மீ. ஆகும்.

19 உயா்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்பு உள்பட இந்த வழித்தடத்துக்கான நிறைவுச் செலவு ரூ. 9,744 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க