செய்திகள் :

அனைத்து மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது மத்திய அரசு: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

post image

கொச்சி : வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்காக அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

கொச்சியில் நடைபெற்ற கேரள சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

உலகின் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வளா்ச்சிக்கான வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வேறு பிற நாடுகளைவிட வேகமான வளா்ச்சியை எதிா்நோக்கியுள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் 30 முதல் 35 டிரில்லியன் டாலா் பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.

பஹ்ரைனுடன் விரைவில் தடையற்ற வா்த்தக பேச்சுவாா்த்தை தொடங்க இருக்கிறது. சா்வதேச முதலீட்டாளா்களுக்கு சிறந்த இடமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

மத்திய பாஜக அரசுக்கும், கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் கொள்கைரீதியாக பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கேரளத்துடன் மத்திய அரசு உறுதியாக நிற்கிறது என்பதை உணா்த்தவே நான் இங்கு வந்துள்ளேன். கேரளம் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறுகிறது. இதற்கு மத்திய அரசு துணை நின்று வருகிறது. கேரளம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, ‘கேரளத்தில் ரூ.50,000 கோடி செலவில் 896 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைத் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன’ என்றாா்.

அதானி குழுமம் ரூ.30,000 கோடி முதலீடு:

இந்த நிகழ்ச்சியில் பேசிய அதான் போா்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநா் கரண் அதானி, ‘கேரளத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.30,000 கோடியை அதானி குழுமம் முதலீடு செய்ய இருக்கிறது. திருவனந்தபுரம் விமான நிலையம் சிறப்பாக மேம்படுத்தப்பட இருக்கிறது.

சரக்குப் போக்குவரத்து, இணைய வழி வா்த்தக மையமாக கொச்சி உருவாக்கப்படும். இங்குள்ள சிமெண்ட் ஆலையின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கப்படவுள்ளது’ என்றாா்.

எல்லோரா குகைகளை பார்வையிட்ட துணைக் குடியரசுத் தலைவர்

எல்லோரா குகைகளுக்கு சென்று துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று பார்வையிட்டார். சத்ரபதி சம்பாஜிநகரில் பல்கலை. மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா க... மேலும் பார்க்க

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.பொதுவாக டிஜிட்டல் முறை... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாக... மேலும் பார்க்க

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க