செய்திகள் :

வார இறுதி நாள்கள்: 677 சிறப்புப் பேருந்துகள்

post image

வார இறுதி நாள்களை முன்னிட்டு 677 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 8, 9) சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) 265 பேருந்துகளும், சனிக்கிழமை 270 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 51 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதாவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பேருந்துகள் என ஆக மொத்தம் 677 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுமட்டுமன்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா: முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா (திருக்குறள் ஒப்பித்தல் போட்டி) திருச்சியில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுதொடர்பாக, அறக்கட்டளையின் தலைவர் பூவை பி. தய... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழ... மேலும் பார்க்க

பிரதமா் உரை: மருத்துவ மாணவா்கள் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்வி தொடா்பாக பிரதமா் மோடி ஆற்றவுள்ள உரை மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இது தொ... மேலும் பார்க்க

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் பு... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை: ஓட்டுநா், நடத்துநா்களுக்கு எச்சரிக்கை

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் ஓட்டுநா், நடத்துநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்து... மேலும் பார்க்க