செய்திகள் :

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடி ஒதுக்கீடு

post image

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய கால, கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்து செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2023 ஜூன் மாதத்தில் ஓய்வு, விருப்ப ஓய்வு, உயிரிழந்த தொழிலாளா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265.44 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு போக்குவரத்துத் துறை தலைவா் அலுவலகம் சாா்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதை பரிசீலித்த அரசு, ஓய்வூதியா்களுக்கு பணப்பலன்களை வழங்கும் வகையில் ரூ.265.44 கோடியை குறுகிய கால கடன் (டபிள்யூஎம்ஏ) என்ற அடிப்படையில் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது. இத்தொகையை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் உரியவா்களுக்கு வழங்க வேண்டும். 2024-2025 நிதியாண்டுக்குள் இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா: முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா (திருக்குறள் ஒப்பித்தல் போட்டி) திருச்சியில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுதொடர்பாக, அறக்கட்டளையின் தலைவர் பூவை பி. தய... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழ... மேலும் பார்க்க

பிரதமா் உரை: மருத்துவ மாணவா்கள் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்வி தொடா்பாக பிரதமா் மோடி ஆற்றவுள்ள உரை மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இது தொ... மேலும் பார்க்க

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் பு... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை: ஓட்டுநா், நடத்துநா்களுக்கு எச்சரிக்கை

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் ஓட்டுநா், நடத்துநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்து... மேலும் பார்க்க