செய்திகள் :

இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.30-ஆக முடிவு!

post image

மும்பை: பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 2 காசுகள் உயர்ந்து ரூ.87.30 ஆக நிலைபெற்றது.

உள்நாட்டு சந்தைகளின் பலவீனமான போக்கும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ததாலும், இந்திய ரூபாய் மீதான அழுத்தம் தொடர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.38 ஆக தொடங்கிய பிறகு இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ.87.27 ஆகவும் பிறகு குறைந்தபட்சமாக ரூ.84.40ஆக வர்த்தகமான நிலையில் முடிவில் இரண்டு காசுகள் உயர்ந்து ரூ.87.30-ஆக முடிந்தது.

இதையும் படிக்க: அசோக் லேலண்ட் விற்பனை 2% உயா்வு

டிரான்ஸ்மிஷன் திட்டங்களுக்கான ஏலத்தை வென்ற பவர் கிரிட்!

புதுதில்லி: மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்மான அமைப்புகளை அமைப்பது தொடர்பான 3 திட்டங்களைப் பெற்றுள்ளதாக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.மேலும் திட்டங்களுக்கான விருப்பக் க... மேலும் பார்க்க

ஹைட்ரஜன் டிரக்குகளின் சோதனை ஓட்டத்தை தொடங்கிய டாடா மோட்டார்ஸ்!

புதுதில்லி: நீண்ட தூர போக்குவரத்து தீர்வுகளுக்கான ஹைட்ரஜனில் இயங்கும் கனரக டிரக்குகளின் சோதனை ஓட்டத்தை தொடங்கியது டாடா மோட்டார்ஸ். பல்வேறு எடையுடன் 16 மேம்பட்ட ஹைட்ரஜன் கம்பஷன் என்ஜின்களின் சோதனை ஓ... மேலும் பார்க்க

ஸ்கைப் சேவை நிறுத்தம்! பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்திய வசதி!

ஸ்கைப் இணையதளப் பக்கம் மே 5ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு மாற்றாக புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டீம்ஸ் என்ற செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவு... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்வு! ரூ. 87.34

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (மார்ச் 3) 3 காசுகள் உயர்ந்து ரூ. 87.34 காசுகளாக நிறைவு பெற்றது.வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 28) 19 காசுகள் சரிந்து ரூ. 87.37 காசுகளாக இர... மேலும் பார்க்க

பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (மார்ச் 3) இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 112 புள்ளிகளும் நிஃப்டி பெரிய மாற்றங்களின்றி 5 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. மேலும் பார்க்க

பங்குச் சந்தை: எழுச்சிக்குப் பிறகு வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை எழுச்சியுடன் தொடங்கிய நிலையில், தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறுவதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந... மேலும் பார்க்க