செய்திகள் :

336* கேட்சுகள்.. விராட் கோலி புதிய சாதனை!

post image

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்து ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடி 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது.

பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விராட் கோலி இந்தப் போட்டியில் புதிய சாதனை ஒன்றையும் தனது பெயரில் இணைத்து அசத்தியுள்ளார்.

இதையும் படிக்க: முதல் அரையிறுதி: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஜோஸ் இங்லீஸ் மற்றும் நாதன் எல்லீஸ் இருவரின் கேட்சுகளையும் பிடித்து விராட் கோலி அசத்தினார். இதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்தவர் என்றப் பட்டியலில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய அணிக்காக அதிக கேட்ச் பிடித்தவர்கள்(விக்கெட் கீப்பர் அல்லாதவர்கள்)

  1. விராட் கோலி - 336* கேட்சுகள்

  2. ராகுல் டிராவிட் -334 கேட்சுகள்

  3. முகமது அசாருதீன் -261 கேட்சுகள்

  4. சச்சின் டெண்டுல்கர் -256 கேட்சுகள்

  5. ரோஹித் சர்மா -223 கேட்சுகள்

இதையும் படிக்க: கையில் கறுப்பு பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி! ஏன்?

ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகள் (விக்கெட் கீப்பர் அல்லாதவர்கள்)

  1. ஜெயவர்த்தனே (இலங்கை) - 218 கேட்சுகள்

  2. விராட் கோலி (இந்தியா) - 161* கேட்சுகள்

  3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) -160 கேட்சுகள்

  4. முகமது அசாருதீன் (இந்தியா) - 156 கேட்ச்கள்

  5. ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) -142 கேட்சுகள்

இதையும் படிக்க: நியூஸி. தொடர்: பாகிஸ்தான் அணியிலிருந்து ரிஸ்வான், பாபர் அசாம் நீக்கம்!

ஒரே போட்டி.. பல சாதனைகள் படைத்த விராட் கோலி!

ஒரே போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

நியூசி.க்கு எதிரான தொடரில் இவரே தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார்: பாக். கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆக்யூப் ஜாவத் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

முதல் அரையிறுதி: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முத... மேலும் பார்க்க

கையில் கறுப்பு பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி! ஏன்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டைகளுடன் விளையாடினர்.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுத... மேலும் பார்க்க

உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் பத்மகர் ஷிவல்கர் காலமானார்!

உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவானான பத்மகர் ஷிவல்கர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடாவிட்டாலும், உள்ளூர்ப் போட்டிகளில் கோலோச்சிய பத்மகர் ஷிவல்கர் கிரிக... மேலும் பார்க்க

நியூஸி. டி20 தொடர்: பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்கள் நீக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய வீரர்களான கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் இருவரும்... மேலும் பார்க்க