2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!
கையில் கறுப்பு பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி! ஏன்?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டைகளுடன் விளையாடினர்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியாவும், 2-வது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணியினர் முதலில் பேட்டிங் ஆடி வருகின்றனர்.
இதையும் படிக்க: உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் பத்மகர் ஷிவல்கர் காலமானார்!
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்திய வீரர்கள் தங்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கினர். உள்ளூர்ப் போட்டிகளில் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் பத்மகர் ஷிவல்கர் காலமானதைத் தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கறுப்பு பட்டையுடன் அவர்கள் விளையாடி வருகின்றனர்.
மறைந்த பத்மகர் ஷிவல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்திய அணி இன்று கையில் கறுப்பு பட்டைகளை அணிந்து விளையாடும் என்று பிசிசிஐயும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நியூஸி. தொடர்: பாகிஸ்தான் அணியிலிருந்து ரிஸ்வான், பாபர் அசாம் நீக்கம்!