ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி - இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்!
நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!
நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது.
2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், தற்போது 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
இந்திய சந்தைககளுக்கான உற்பத்தியில் பலவீனமான வளர்ச்சி மற்றும் விற்பனை ஆகியவற்றால் உற்பத்தி கொள்முதலும் குறைந்துள்ளது.
உற்பத்தித் துறை தரவுகளைத் தொகுத்து வழங்கும் எஸ்&பி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநரான பிரஞ்சுல் பந்தாரி, பிப்ரவரியில் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரியில் இது 57.7 சதவீதமாக இருந்தது.
இந்திய உற்பத்தித் துறையை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் உலகளாவிய தேவை வலுவாகவே உள்ளது. இது கொள்முதல் நடவடிக்கைகளையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும்.
தொழில் துறை விரிவாக்கமும் வலிமையாக நடந்துவருகிறது. இது கனிசமான உற்பத்தியை இந்த ஆண்டில் உருவாக்கும்.
உற்பத்தியில் நிலவும் பலவினமானபோக்கு 2023 டிசம்பர் மாதத்தில் இருந்தே நீடித்து வருகிறது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிப்ரவரியில் தொழில் துறை நேர்மறையாகவே இருந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | அசோக் லேலண்ட் விற்பனை 2% உயா்வு