செய்திகள் :

மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த சிவராஜ்குமார்!

post image

புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட நடிகர் சிவராஜ்குமார் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

கன்னட திரையுலகின் நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடமும் பெரிதாகப் பிரபலமானார்.பின், நேரடி தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதற்கிடையே, அவர் நடித்த கோஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக, மஃப்டி திரைப்படத்தின் முன்கதையாக உருவான ‘பைரதி ரணகல்’ படத்தில் நடிக்கச் சென்றார்.

இதையும் படிக்க: ரஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: கொந்தளித்த காங்கிரஸ் எம்எல்ஏ!

அப்படம் முடிந்ததும், தன் சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா செல்ல உள்ளதையும் சிவராஜ்குமார் தெரிவித்தார்.

இது ரசிகர்களிடம் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பின், அங்கு சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார்.

இந்த நிலையில், புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டதைத் தொடர்ந்து தன் 131-வது படத்தின் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். பெங்களூருவில் துவங்கிய இப்படப்பிடிப்பில் அவருக்கு ரசிகர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

நீ நான் காதல் தொடரில் 3வது முறையாக மாறும் நடிகை! மீண்டும் சாய் காயத்ரி!

நீ நான் காதல் தொடரில் நடிகை அஸ்ரிதாவுக்கு பதிலாக மீண்டும் நடிகை சாய் காயத்ரி நடிக்கவுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் இருந்து சில காலத்துக்கு இவர் விலகி இருந்ததாகவும், தற்போது மீண்டும் ... மேலும் பார்க்க

பேட் கேர்ள் டீசரை நீக்கக் கோரிய வழக்கு: கூகுள் பதிலளிக்க உத்தரவு!

பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசரை யூடியூப்பிலிருந்து நீக்கக் கோரிய வழக்கில் புதிய உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வ... மேலும் பார்க்க

தள்ளிப்போகும் இட்லி கடை?

குட் பேட் அக்லியால் இட்லி கடை படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட... மேலும் பார்க்க

உள்ளுக்குள் இருக்கும் தமிழ்ப் பெண்! கேரள நடிகை பகிர்ந்த விடியோ!

சின்ன திரை நடிகை அஸ்வதி தனக்குள் இருக்கும் தமிழ்ப் பெண்ணை வெளிக்கொணர்ந்ததை விடியோவாகப் பதிவிட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், தமிழில் மோதலும் காதலும், மலர் உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்... மேலும் பார்க்க

மாசிமக கொடியேற்றத்தின்போது கொடிக்கயிறு அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனுறை சாட்சிநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மக பிரமோற்சவ கொடியேற்றத்தின்போது கொடிக்கயிறு அறுந்து விழுந்ததால் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தன... மேலும் பார்க்க

சக்ரபாணிசுவாமி கோயிலில் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம்!

மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டுதோ... மேலும் பார்க்க