சர்தார் - 2 படப்பிடிப்பில் கார்த்திக்கு காயம்!
சர்தார் - 2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.
இதிலும் நடிகர் கார்த்தியே நாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: வீர தீர சூரன் 2-வது பாடல் அறிவிப்பு!
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சண்டைக் காட்சி ஒன்றில் நடிகர் கார்த்திக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழு சென்னை திரும்பியதாகவும் காலில் ஏற்பட்ட வீக்கம் குறைய சில நாள்கள் ஆகும் என்பதால் கார்த்தி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.