கழுமலையில் மது விற்பனை: தொழிலாளி கைது
கோவில்பட்டி, மாா்ச் 2: கழுமலையில் விதிமுறை மீறி மது விற்ாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தராஜ் தலைமையில் போலீஸாா் காந்தி மைதானம் அருகே ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள கடையின் அருகில் பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவா் கயத்தாறு வட்டம் சூரிய மினுக்கன் வடக்குத் தெருவை சோ்ந்த கருப்பசாமி மகன் சங்கரபாண்டி (55) என்பதும், கழுகுமலை செந்தூா் நகா் மதுபான கூடத்தில் வேலைசெய்து வருவதும், மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த 20 மது பாட்டில்கள், ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.