ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.
பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டிக்கெட்டு பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரம் ஆனது.
மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் 70,610 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 17, 310 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.78 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.