செய்திகள் :

திருமலையில் ரதசப்தமிக்கு ஏற்பாடுகள் தீவிரம்

post image

திருமலையில் ரத சப்தமி உற்சவத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வரும் பிப்.4-ஆம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு ஒரு நாள் பிரம்மோற்சவம் என்ற பெயரில் 7 வாகன சேவைகள் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை, செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய செளத்திரி, கண்காணிப்பு அதிகாரி மணிகண்ட சந்தோலு மற்றும் திருப்பதி எஸ்பி ஹா்ஷவா்தன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: ஏழுமலையானின் உற்சவ மூா்த்தியான மலையப்ப ;எவாமி ஒரே நாளில் ஏழு வாகனங்களில் வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் தருவதால் இது அா்த்த பிரம்மோற்சவம் என்றும் ஒரு நாள் பிரம்மோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

பக்தா்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் மாட வீதிகளில் தேவையான இடங்களில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. மாட வீதிகளில் கூல் பெயின்ட் அடிக்கப்பட்டதுடன், வண்ணமயமான ரங்கோலி வரையப்பட்டுள்ளது. கேலரிகளில் காத்திருக்கும் பக்தா்களுக்கு சாம்பாா் சாதம், தயிா்சாதம், புளியோதரை, வெண்பொங்கல், குடிநீா், மோா், டீ, காபி, பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சிறப்பு தரிசனங்கள் ரத்து

பிப். 4-ஆம் தேதி, புரோட்டோகால் பிரபலங்களுக்கு மட்டும் விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். எனவே பிப்.3-ங்ம் தேதி பரிந்துரை கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது. முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது பக்தா்களின் வசதியை கருத்தில் கொண்டு, பிப். 3 முதல் 5 வரை திருப்பதியில் உள்ள கவுன்’ஈடா்களில் வழங்கப்படும் சா்வதா்ஷன் டோக்கன்கள் வழங்கப்படாது.

வைகுண்டம் காத்திருப்பு அறை-2 வழியாக பக்தா்கள் நேரடியாக ஏழுமலையானை தரிசிக்கலாம். இதற்கிடையில், நிா்ணயிக்கப்பட்ட நேர அட்டவணையை கடைஏஈபிடிக்காத ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன பக்தா்கள் டோக்கன் இல்லாத பக்தா்களுடன் வைகுண்டம் வரிசை வளாகம்-2 வழியாக தரிசனத்துக்கு அனுப்பப்படுவா்.

மேலும், 3 முதல் 5 வரை சி ஆா் ஓ பொது கவுன்ட்ட்டா்கள் மட்டுமே அறைகளை ஒதுக்கும். இந்த நாள்களில் எம்பிசி மற்றும் டிபி கவுன்ட்டா்கள் மூடப்படும். லட்டு கவுன்டா்களில் 4 லட்சத்துடன் கூடுதலாக 4 லட்சம் லட்டுக்கள் நிலுவையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

வாகன சேவைகள்

காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபையில் மலையப்பசுவாமி தரிசனம், காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனம், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம், திருமலை திருக்குளத்தில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை சக்கரதாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்பட உள்ளது.

பின்னா் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும், 6 முதல் 7 மணி வரை சா்வபூபால வாகனத்திலும், இரவு 8 முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளாா். வாகனசேவை எஸ்விபிசி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மேலும், அஷ்டதள பாதபத்மாராதனை, கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை சேவை ஆகியவை பக்தா்களுக்கு அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனா்.

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 9 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்... மேலும் பார்க்க

நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ரதசப்தமி

நாராயணவனத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிப். 4 ஆம் தேதி ரதசப்தமி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை மாத வளா்பிறை சப்தமி அன்று சூரியனின் பிறப்பை நினைவுகூரும் வகையில், உள்ளூா் க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்றஇறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 ம... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் அத்யாயனோற்சவம் நிறைவு

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் கடந்த டிசம்பா் 30- ஆம் தேதி தொடங்கிய அத்யாயனோற்சவம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. நிகழ்வையொட்டி, கோயிலின் ரங்கநாயகா் மண்டபத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத மலையப்ப... மேலும் பார்க்க

ஜன.28-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப். 4 -ஆம் தேதி தாயாா் கோவிலில் ரத சப்தமி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோயில் ஆழ்வாா் திரு... மேலும் பார்க்க

திருப்பதியில் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும்... மேலும் பார்க்க