Siragadikka aasai : ரோகிணியைப் பற்றிய உண்மை; வித்யா என்ன செய்வார்? - இந்த வாரம் ...
டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடல்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய பாடலின் புரோமோ வெளியானது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள டிராகன் படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில் ’ஏன் டி விட்டுப் போன’ என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். இந்தப் பாடலின் புரோமோ விடியோவை டிராகன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதுவரையில், நடிகர் சிலம்பரசன் குரலில் வெளியான பாடல்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையே பெற்றுள்ளன. நீண்ட காலத்துக்குப் பின்னர், சிலம்பரசன் குரலில் பாடல் வெளியாகவுள்ளதால், டிராகன் படம் மீதான ஆவல் அதிகரிப்பதாக ரசிகர்கள் ஆர்வம் தெரிவிப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், மரியம் ஜார்ஜ், சித்ரா, விஜே சித்து, ஹர்ஷத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். டிராகன் படம் காதலர் நாளான பிப்ரவரி 14 ஆம் தேதியில்தான் வெளியிடப்படவிருப்பதாக முதலில் அறிவித்தனர். ஆனால், நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதியில் வெளியிடப்படவிருப்பதால், டிராகன் படத்தின் தேதியை பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக டிராகன் படக்குழுவினர் அறிவித்தனர்.
மேலும், நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் பிப்ரவரி 21 ஆம் தேதியில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:எம்புரான் டீசர் வெளியீடு!