ஆமை: தனிமை விரும்பிகள், மனிதனுக்கு மூத்தவை -ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
``வேலை இழந்து, திருமணம் ரத்தாகி..." -சைஃப் அலிகான் தாக்குதலில் சந்தேகத்தில் கைதானவர் வேதனை..
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த மாதம் அவரது வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். அவரை தாக்கியதாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு சைஃப் அலிகானை தாக்கிய நபர் மும்பை அருகிலேயே கைது செய்யப்பட்டார்.
சைஃப் அலிகானை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் ஓடும் ரயிலில் ஆகாஷ் கைலாஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட அதே நாள் இரவுதான் சைஃப் அலிகானை தாக்கிய நபர் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆகாஷ் கைலாஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி விட்டு விடுவித்தனர். ஆனால் அவர் பிடிபட்ட செய்தி நாடு முழுவதும் வைரலானது. மும்பையில் ஆகாஷ் டிராவல்ஸில் டிரைவர் வேலை செய்து வந்தார். அவரது சொந்த ஊர் சத்தீஷ்கர் மாநிலம் நெஹ்லா ஆகும். அவர் மும்பை கொலாபாவில் வசித்து வந்தார்.
புகைப்படத்தை வெளியிட்ட ரயில்வே போலீஸார்..
சொந்த ஊரில் அவருக்கு திருமணமும் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. ஊரில் அவரது பாட்டிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பாட்டியை பார்த்துவிட்டு திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணையும் பார்த்துவிட்டு வரலாம் என்று ரயில் மூலம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது நடுவழியில் கைது செய்யப்பட்டார். அவரை பிடித்ததோடு அவரது புகைப்படத்தையும் பத்திரிகையில் ரயில்வே போலீஸார் வெளியிட்டனர். இதனால் ஆகாஷை வேலையில் இருந்து நீக்கி விட்டனர்.
``எதிர்காலத்தில் திருமணம் நடக்குமா..?" ஆகாஷ் வேதனை
இது குறித்து ஆகாஷ் கூறுகையில், ''என்னை ரயில்வே போலீஸார் பிடித்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து மீடியாவிலும் எனது புகைப்படத்தை வெளியிட்டுவிட்டனர். இதனால் எனது வேலை பறிபோய்விட்டது. அதோடு எனக்கு பெண் பார்த்திருந்த இடத்தில் திருமணத்தையும் ரத்து செய்துவிட்டனர். ஜனவரி 17-ம் தேதி போலீஸார் எனக்கு போன் செய்து எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
நான் வீட்டில் இருப்பதாக தெரிவித்தேன். அதன் பிறகு நான் ரயில் மூலம் எனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தேன்.ரயில் துர்க் ரயில் நிலையத்தில் நின்ற போது என்னை பிடித்தனர். எனக்கும் சைஃப் அலிகான் தாக்கப்பட்டதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தேன். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அதே நாளில் சைஃப் அலிகானை தாக்கிய ஷெர்புல் என்பவரை கைது செய்தனர். அதன் பிறகு 19-ம் தேதி என்னை விடுவித்தனர். ஆனால் எனது வேலையும் பறிபோய்விட்டது. திருமணமும் நின்றுவிட்டது. எனக்கு எதிர்காலத்தில் திருமணம் நடக்குமா என்றும் தெரியவில்லை''என்று மிகவும் கவலையோடு தெரிவித்துள்ளார்.