செய்திகள் :

மும்பை: பங்குச்சந்தையில் அதிக லாபம் பார்க்கலாம்... போலி ஆப் மூலம் கோடிகளை இழந்த முதியவர்

post image

மும்பையில் முதியவர்கள் மற்றும் பெண்களிடம் தங்களை போலீஸ், சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து கோடிக்கணக்கில் மர்ம கும்பல் பணம் பறித்து வருகிறது. இக்கும்பல் பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி போலி மொபைல் ஆப்கள் மூலமும் மோசடி செய்து வருகிறது. இக்கும்பலின் மோசடியில் மும்பையைச் சேர்ந்த மேலும் ஒரு முதியவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு மும்பை கொலாபாவில் வசிக்கும் 75 வயது முதியவர் ஒருவருக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாட்ஸ் ஆப் மூலம் ஆன்யா ஸ்மித் என்பவரின் தொடர்பு கிடைத்தது. அப்பெண் முதியவரிடம்தான் கிளப்17 என்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். அதோடு முதியவருக்கு அடிக்கடி அப்பெண் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

முதியவர்
முதியவர்

இதன் மூலம் முதியவரின் நம்பிக்கையைப் பெற்ற அப்பெண் தங்களது கம்பெனியின் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார். அப்பெண்ணின் வார்த்தையை நம்பி அப்பெண் அனுப்பிய மொபைல் ஆப் மூலம் முதியவர் முதலீடு செய்தார்.

கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை முதியவர் 11.6 கோடி ரூபாயை முதலீடு செய்தார். மொத்தம் 22 பரிவர்த்தனைகள் மூலம் அவர் பல்வேறு வங்கிக்கணக்கிற்குப் பணத்தை அனுப்பினார். அவர் முதலீடு செய்த பணம் எந்த அளவுக்கு லாபத்தைக் கொடுத்திருக்கிறது என்ற விபரத்தை மொபைல் ஆப்பில் பார்க்க முடிந்தது.

அதில் அதிகப்படியான லாபம் கிடைத்திருப்பதாகக் காட்டியது. ஆனால் ஒரு கட்டத்தில் முதியவர் மொபைல் ஆப்பில் இருந்து தனது பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அதற்கு 20 சதவீத வரி கட்டவேண்டும் என்று அப்பெண் தெரிவித்தார். அதனை நம்பி 20 சதவீத பணத்தையும் முதியவர் செலுத்தினார். அப்படி இருந்தும் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. மேலும் சில வரிகளைச் சொல்லி பணம் செலுத்தும்படி கேட்டனர். இதனால் சுதாரித்துக்கொண்ட முதியவர் இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9.5 லட்சத்தை முதியவரிடமிருந்து பெற்று இருந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். இம்மோசடி தொடர்பாக தலைமறைவாக இருக்கும் ராம்கிஷோர், முக்தார் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

அக்னி தீர்த்தம்: `உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா' -குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் சிறை

ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த தனியாருக்கு சொந்தமான டீ கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய ஓ.பி.எஸ்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி(58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக ... மேலும் பார்க்க

சென்னை: சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட மூவர் கைது; சிக்கியது எப்படி?

வடசென்னையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், "தன்னுடைய 12 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்... மேலும் பார்க்க

வேங்கை வயல்: ``சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது'' -மூவர் தரப்பில் மனுத்தாக்கல்!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் ந... மேலும் பார்க்க

`டாக்டர், அரசு அதிகாரி..!’ - ஆசை வலை வீசி பல ஆண்களுடன் திருமணம்; சமூகவலைதள பதிவால் சிக்கிய பெண்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரன் (27). இவர் தனியார் வங்கியில் குழு கடன் வசூல் செய்யும் பணியில் இருக்கிறார். சிவசந்திரனுக்கும், நிஷாந்தி என்பவருக்கும் கடந்த வாரம் முறைப்படி ... மேலும் பார்க்க

``வேலை இழந்து, திருமணம் ரத்தாகி..." -சைஃப் அலிகான் தாக்குதலில் சந்தேகத்தில் கைதானவர் வேதனை..

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த மாதம் அவரது வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். அவரை தாக்கியதாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு சைஃப் அலிகானை தாக்கிய நப... மேலும் பார்க்க