இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
`டாக்டர், அரசு அதிகாரி..!’ - ஆசை வலை வீசி பல ஆண்களுடன் திருமணம்; சமூகவலைதள பதிவால் சிக்கிய பெண்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரன் (27). இவர் தனியார் வங்கியில் குழு கடன் வசூல் செய்யும் பணியில் இருக்கிறார். சிவசந்திரனுக்கும், நிஷாந்தி என்பவருக்கும் கடந்த வாரம் முறைப்படி சீர்காழியில் உள்ள ஒரு திருமண மண்டபம் ஒன்றில் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இருவரது திருமண போட்டோவை சிவசந்திரன் நண்பர்கள் சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த திருமண போட்டோவை பார்த்த சீர்காழி, புத்தூர் வாய்க்காங்கரை பகுதியை சேர்ந்த நெப்போலியன் (34) அதிர்ந்ததுடன், `எனக்கும், அந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்றது. அவர் பெயர் மீரா, தான் ஒரு அரசு அதிகாரி என கூறி என்னிடம் அறிமுகமானார். இருவரும் நெருங்கி பழகியதுடன் முறைப்படி திருமணமும் செய்து கொண்டோம். பின்னர், கடலூர், சிதம்பரம், சென்னை ஆகிய ஊர்களில் இருந்தோம். 2021ல் சென்னையில் வசித்து வந்த போது எந்த தகவலும் சொல்லாமல் என்னை விட்டு சென்று விட்டார். அதன் பின் பல இடங்களில் தேடியும் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மீராவின் போட்டோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என்னை ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீஸார் நிஷாந்தி என்கிற மீராவிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், `கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் தான் மோசடியில் ஈடுப்பட்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் மகளை கணவரின் அண்ணன் பராமரிப்பில் விட்டவர் மகனுடன் அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் போன்ற தோற்றம், வசீகரமான உடல்வாகு கொண்ட லட்சுமி தன் பெயரை மீரா என சொல்லிக்கொண்டதுடன் தான் ஒரு அரசு அதிகாரி என காட்டிக்கொண்டு நெப்போலியனிடம் பழகியுள்ளார். 2021ல் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு சில ஆண்டுகள் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். பின்னர் லட்சுமி, நெப்போலியனை விட்டு சென்று விட்டார். இந்நிலையில், சிவசந்திரனின் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிவசந்திரன் உடன் இருந்து கவனித்துள்ளார்.
அப்போது, தன் பெயர் நிஷாந்தி என்றும் தான் டாக்டராக இருப்பதாக கூறி சிவசந்திரனிடம் பழகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதுடன் அந்த போட்டோவையும் பதிவிட்டனர். இதைதொடர்ந்த புகாரில் தான் லட்சுமியின் உண்மை முகம் தெரியவந்துள்ளது. சிதம்பரம், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களில் பல ஆண்களை தன் வலையில் வீழ்த்தி ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லட்சுமியை கைது செய்து போலீஸ் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY