ஆமை: தனிமை விரும்பிகள், மனிதனுக்கு மூத்தவை -ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
15 வாக்குறுதிகள்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி 15 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய கேஜரிவால்,
ஆம் ஆத்மியின் வாக்குறுதிகளை நகலெடுப்பதாக பாஜகவை கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
நாங்கள்தான் நாட்டில் வாக்குறுதி என்ற வார்த்தையை முதலில் உருவாக்கியதாகவும், அதை பாஜக நகலெடுத்துள்ளது. ஆனால் எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம். அவர்கள் அதைச் செய்யவில்லை.
இந்த தேர்தல் அறிக்கையில் 15 வாக்குறுதிகள் உள்ளன. அதில் கேஜரிவால் தனது முதல் வாக்குறுதியாக தில்லி குடியிருப்பாளர்களுக்கு வலுவான வேலைவாய்ப்பு உருவாக்கத்தை உறுதியளித்தார்.
இரண்டாவதாக மகிளா சம்மன் யோஜனாவில் பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ. 2,100 உறுதி செய்கிறது.
மூன்றாவதாக சஞ்சீவினி யோஜனா மூலம் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படும்.
நான்காவதாக உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணங்கள் தள்ளுபடி, ஐந்தாவதாக ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்குதல்..
அடுத்ததாக முக்கிய வாக்குறுதிகளாக.. மாசுபட்ட யமுனை நதியைச் சுத்தம் செய்யப்படும், தில்லியின் சாலைகளை உலகத் தரமாக மாற்றப்படும்.