விடைபெற்றது வடகிழக்கு பருவமழை!
வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில், ”கடந்த 2 நாள்களாக தென்கிழக்கு தீபகற்பத்தில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லை. வட இந்தியப் பகுதிகளில் வறண்ட காற்று நிலவுகிறது.
இத்தகைய காரணங்களால் வடகிழக்கு பருவமழையானது கேரளம் - மாஹே, தெற்கு உள் கர்நாடகம், தமிழ்நாடு - புதுச்சேரி - காரைக்கால், ராயல்சீமா, ஆந்திரப் பரதேசத்தை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகள் மாற்றும் ஏனாம் பகுதிகளில் இன்றோடு(ஜன. 27) விடைபெற்றது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: திமுகவும் அதிமுகவும் ஒரே கட்சிதான்: சீமான்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்.15-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வளிமண்டல சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஃபென்ஜால் புயல் உள்ளிட்ட காரணங்களால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
2024-இல் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 33 சதவீதம் அதிகமாக பெய்தது.
பொதுவாக, வடகிழக்கு பருவமழை டிசம்பா் மாத இறுதியுடன் நிறைவுறும். ஆனால் இந்த முறை ஜனவரி இறுதி வரை நீடித்தது. இந்தச் சூழலில் இன்றோடு வடகிழக்கு பருவமழை விலகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.