பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொள்ளக் கூடாது: சாா்பு-நீதிபதி ...
போக்குவரத்து நெரிசல்: சென்னை - திண்டிவனம் இடையே புதிய சாலை!
சென்னை மற்றும் திண்டிவனம் இடையே புதிய சாலை அமையவுள்ளது.
தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது சொந்த ஊர்களுக்கு செல்லும்போதும் சென்னைக்கு திரும்பும்போதும் சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த சென்னை - திண்டிவனம் இடையே புதிய சாலை அமையவுள்ளது.
சென்னை மற்றும் திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய சாலையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க: ஸோஹோ தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ராஜிநாமா!
கருங்குழி மற்றும் பூஞ்சேரி இடையே 32 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய சாலையை அமைப்பதற்கு ரூ. 80 லட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.
இந்த புதிய சாலையில் செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டிற்கு முன்பாக மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியில் இருந்து உள்நுழைந்து, கிழக்கு கடற்கரைச் சாலை பூஞ்சேரி வழியாக வெளியே வரும் வகையில் சாலை அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.