செய்திகள் :

தனுஷுக்கு எதிரான நெட்ஃபிளிக்ஸின் மனு தள்ளுபடி!

post image

நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக, தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இயக்குநா் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரௌடி தான்’ திரைப்படத்தை தனுஷின் வொண்டா்பாா் நிறுவனம் தயாரித்தது. நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் கடந்த நவம்பா் மாதம் வெளியானது.

அதில், நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உரையாடும் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், அந்தப் படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ. 10 கோடி இழப்பீடு வழங்கவும் காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரியும் வொண்டா் பாா் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடா்ந்தது.

இதையும் படிக்க: உ.பி. திருவிழாவில் மேடை சரிந்ததில் 7 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

இதனைத் தொடர்ந்து, தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்துச் செய்யக்கோரி மனு ஒன்றை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று(ஜன. 28) விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், வொண்டா்பாா் நிறுவனம் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை பிப். 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பெண்களை காரில் துரத்திய சம்பவம்: காவல் துறை விளக்கம்!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் தாம்பரம் மாநகரக் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம்: மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு !

2024-25 கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:“கலைஞரின் க... மேலும் பார்க்க

கோவை தம்பதி ஆணவப் படுகொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணமகனின் சகோதரா் வினோத் குமார் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், ... மேலும் பார்க்க

2-ஆம் கட்ட தவெக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்!

தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தவெக தலைவர் விஜய் கடந்த ஜன.24 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்துக்கு ... மேலும் பார்க்க

1985 விமான குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்பட்ட நபரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!

கனடா நாட்டில் 1985 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஏர் இந்தியா விமான குண்டு வெடிப்பில் தொடர்புடைய சந்தேக குற்றவாளியைக் கொலை செய்த 24 வயது கனடா நாட்டு இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந... மேலும் பார்க்க

பூவா தலையா நடிகர்கள் நடிக்கும் புதிய தொடர்!

பூவா தலையா தொடர் நடிகர்கள் நடிக்கும் புதிய சீரியளான பூங்கொடி தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ... மேலும் பார்க்க