ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
இன்று தொடங்கி பூத் ஸ்லிப் வழங்கும் பணி பிப்.1ஆம் தேதிக்குள் முடிவடையும் என தகவல் தெரியவந்துள்ளது.
பூத் ஸ்லிப் வழங்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட 200 பேர் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது.
இத்தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சா் சு.முத்துசாமி தலைமையிலான திமுகவினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அண்ணா பல்கலை. மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? உச்ச நீதிமன்றம்
தேர்தலையொட்டி வாக்குப் பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 47 வேட்பாளா்கள் போட்டியில் உள்ள நிலையில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.