தில்லி தோ்தல்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாக்குப்பதிவு!
'4 மாதங்களுக்கு 96 மில்லியன் டாலர் சம்பளம்' - ஆப்பிள், கூகுள் சிஇஓ-க்களை மிஞ்சிய Starbucks சிஇஓ!
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ வான பிரையன் நிக்கோல், கடந்த 4 மாதங்களில் ஆப்பிள், கூகுள் நிறுவனங்களின் சிஇஓ க்களை விட அதிகம் சம்பளம் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ வாக பதவி வகிக்கும் ப்ரையன் நிக்கோல், கடந்த ஆண்டில் நான்கு மாதங்களுக்கு மட்டும் 96 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெற்றிருக்கிறார். அதுபோக 1 லட்சத்து 43 அமெரிக்க டாலர்கள் அவரின் வீட்டு வாடகைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டிலிருந்து சியாட்டலில் உள்ள ஸ்டார்பக்ஸ் அலுவலகத்திற்கு வந்து செல்ல 72000 அமெரிக்க டாலர்களை ஒதுக்கி விமானமும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் போக அவரது தனிப்பட்ட செலவுகளுக்காக 19,000 டாலர்களையும் வழங்கியிருக்கிறார்கள்.
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சிஇஓ க்களான டிம் குக் மற்றும் சுந்தர் பிச்சை கூட இவ்வளவு அதிக ஊதியத்தை பெறவில்லை. அவர்கள் இருவரும் கடந்த ஆண்டில் தோராயமாக தலா 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக பெற்றிருக்கிறார்கள்.
லக்ஷ்மண் நரசிம்மன் என்பவர்தான் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தார். அவரின் பதவிக்காலம் முடிந்த பிறகே ப்ரையன் நிக்கோல் அந்த பதவிக்கு வந்தார். இதற்கு முன்னர் சிப்டோல் என்கிற நிறுவனத்தின் சிஇஓவாக நிக்கோல் செயல்பட்டு வந்தார். அவர் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு மாறுவதற்காக பல்வேறு சலுகைகளையும் வசதி வாய்ப்புகளையும் அந்த நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY