செய்திகள் :

ஆக்லாந்து தொழில்நுட்பபல்கலையுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

post image
மதுரை, ஜனவரி 18, 2025: தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பிரபல மருத்துவமனையான மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, உடல்நல பராமரிப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வியில் உலகளாவிய ஒத்துழைப்புகளை மேற்கொள்வதற்கான இலக்கை நோக்கி ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

இந்த தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக உடல்நல அறிவியல் கல்வி  மற்றும் புத்தாக்கத்தில் தலைமைத்துவ பண்பிற்காக பிரபலமாக அறியப்படும் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் (AUT) கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். S. குருசங்கர் மற்றும் திருமதி. காமினி குருசங்கர் மற்றும் ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைகழகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழுவிற்கிடையே மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் ஒரு உயர்நிலை கூட்டம் இன்று நடைபெற்றது. நியூசிலாந்திலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகள் குழுவில் புரொஃபசர் பிரெட் கோவன், புரொஃபசர்  டாக்டர். ஜான் தேவார், புரொஃபசர். சோனல் டொலாக்கியா, மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னேற்ற ஆலோசகர் திரு. தேவ் தத்தா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

தங்களது இவ்வருகையின் போது, AUT குழுவினர் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் அதன் குழும நிறுவன வளாகத்திலுள்ள நவீன வசதிகள் மற்றும் அமைவிடங்களை பார்வையிட்டனர். மீனாட்சி மிஷன் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம், மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர் மற்றும் மீனாட்சி செவிலியர் கல்லூரி ஆகியவை பார்வையிடப்பட்ட மருத்துவ மற்றும் கல்வி வளாகங்களுள் உள்ளடங்கும். இந்நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள், பணியாளர்களுடன் ஆழமான விவாதங்களில் ஈடுபட்ட அவர்கள், சுகாதாரக் கல்வியையும், ஆராய்ச்சியில் புத்தாக்கத்தையும் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.

மீனாட்சி மருத்துவமனை

நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றான  ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சான்றிதழ்களிலிருந்து முனைவர் பட்டங்கள் வரை பல்வேறு கல்வி நிலைகளிலும் மற்றும் எண்ணற்ற துறைகளிலும், 250-க்கும் அதிகமான கல்வி திட்டங்களை வழங்கி வருகிறது. நியூசிலாந்தில் சுகாதார அறிவியல் கல்வியை வழங்குவதில் முதன்மை உயர் மையமாகவும் திகழும் AUT, மருத்துவத்தில் குறுகியகால கல்வி திட்டங்களோடு இளங்கலை மற்றும் முதுகலை கல்வி திட்டங்களையும் பல்வேறு பிரிவுகளில் வழங்கி வருகிறது.

இது தொடர்பாக, டாக்டர் குருசங்கர் கூறியதாவது: “அனைத்து தரப்பு மக்களும் அணுகிப்பெறக் கூடியதாக உலகத்தரம் வாய்ந்த உடல்நல பராமரிப்பையும், மருத்துவ கல்வியையும் வழங்குவதே எமது செயல்திட்டமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இந்த குறிக்கோளை அடைவதற்கு ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடனான ஒத்துழைப்பு செயல்பாடு ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும். அதிக சாத்தியத்திறன் கொண்ட இக்கூட்டாண்மையின் வழியாக, அறிவு பரிமாற்றத்தை ஊக்குவிப்பதும், ஆராய்ச்சியில் புத்தாக்கத்தை முன்னெடுப்பதும் மற்றும் எமது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ தொழில்முறை பணியாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதும் எமது நோக்கமாகும். இதுபோன்ற முன்னெடுப்பு திட்டங்கள், உடல்நல பராமரிப்பிலும், மருத்துவக் கல்வியிலும் தரநிலைகளை இன்னும் உயர்த்தி வழங்குவதில் எமது பொறுப்புறுதியை வலுவாகச் சுட்டிக்காட்டுகின்றன”.

மீனாட்சி மருத்துவமனை

ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ள உத்தேசிக்கப்படும் இந்த ஒத்துழைப்பானது, உலகளவில் உயர்மேன்மை நிலையை நோக்கிய மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கிறது. இப்பிராந்தியத்தில் சுகாதார கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு நம்பிக்கையளிக்கும் எதிர்காலத்தை இது குறிக்கிறது.

Zoho : 'AI-ல் கவனம் செலுத்த போகிறேன்...' - சி.இ.ஓ பதவியில் இருந்து விலகும் ஸ்ரீதர் வேம்பு!

இந்தியாவின் குறிப்பிடத்தக்க மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. இதன் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை இருந்து வந்தவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் இந்தியாவின் 39 வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார். கடந்த 2021 இல் இ... மேலும் பார்க்க

LIC: அண்ணாசாலையிலுள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் 76-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

எல்.ஐ.சி. தென் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் எல்.ஐ.சி தென்மண்டலம், 76-வது குடியரசு தின விழாவை சென்னை அண்ணாசாலையிலுள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் கொண்டாடியது. எல்.ஐ.சி.யி... மேலும் பார்க்க

'4 மாதங்களுக்கு 96 மில்லியன் டாலர் சம்பளம்' - ஆப்பிள், கூகுள் சிஇஓ-க்களை மிஞ்சிய Starbucks சிஇஓ!

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ வான பிரையன் நிக்கோல், கடந்த 4 மாதங்களில் ஆப்பிள், கூகுள் நிறுவனங்களின் சிஇஓ க்களை விட அதிகம் சம்பளம் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ வாக ... மேலும் பார்க்க

LIC: `எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்டில் ரூ.2.164 கோடி சொத்து' - புதிய சாதனை

நாட்டிலேயே ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் (எம்எஃப்) வணிகத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. மேலும் தென் மாநிலங்களில் நிர்வாகத்தின் கீழ் (ஏஏயுஎம்) சராசரி சொத்துக்களின் அ... மேலும் பார்க்க

`5 வருடங்களில் 10 லட்சம் சாமானிய வணிகர்கள் காணாமல் போய்விட்டனர்!' - ஏ.எம்.விக்கிரமராஜா சொல்வதென்ன?

கரூர், மதுரை சாலையில் உள்ள கரூர் மாவட்ட நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா மற்றும் வணிகர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அ... மேலும் பார்க்க

`டிரம்ப் மீம் காயின்' -கிரிப்டோ கரன்சி உலகிற்கு டிரம்பின் புதிய அறிமுகம்! | Trump Meme Coin

ஆரம்பத்தில் கிரிப்டோ கரன்சிக்கு எதிர்ப்பாளராக இருந்த டிரம்ப், இன்று தனது பெயர் மற்றும் உருவத்துடன் புதிய கிரிப்டோ மீம் காயினை அறிமுகப்படுத்தியுள்ளார். இதுக்குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில், 'என்னுடைய ப... மேலும் பார்க்க