இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
LIC: அண்ணாசாலையிலுள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் 76-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
எல்.ஐ.சி. தென் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் எல்.ஐ.சி தென்மண்டலம், 76-வது குடியரசு தின விழாவை சென்னை அண்ணாசாலையிலுள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் கொண்டாடியது. எல்.ஐ.சி.யின் தென்மண்டல மேலாளர் திரு.ஜி.வெங்கடரமணன் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். குடியரசுதின விழா வாழ்த்து தெரிவித்த மண்டல மேலாளர் நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு எல்.ஐ.சி.யின் இன்றிமையாத பங்கினை நினைவு கூர்ந்தார்.
நாட்டின் பெண்கள் பயன் பெறும் வகையில் உதவித் தொகையுடன் கூடிய 'பீமா சகி' என்ற திட்டத்தை நமது மாண்புமிகு பிரதம மந்திரி அவர்கள் சென்ற மாதம் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் சேரும் பெண்களுக்கு அவர்கள் தகுதி நிலைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், முகவர் கமிஷனுடன் மாதந்தோறும் மூன்று வருடங்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும்.
அறிமுகம் செய்த ஒரு மாதத்திற்குள் 50,000-க்கும் அதிகமான பெண்கள் பீமா சகி திட்டத்தில் இணைந்துள்ளனர். நாட்டின் பெண்கள் தற்சார்பு அடைய உதவும் இத்திட்டத்தை அறிமுகம் செய்ததில் எல்.ஐ.சி. மிசுவும் பெருமை கொள்கிறது.
நுண் நிதி நிறுவனங்களின் உறுப்பினர்கள்/கடன் பெறுபவர்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப, எளிய முறையில் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை வழங்க ஒற்றைப்பிரீமிய குழு மைக்ரோ டெர்ம் காப்பீட்டுத் திட்டத்தை எல்.ஐ.சி.அறிமுகப்படுத்தியுள்ளது.
எல்.ஐ.சி.யின் அழைப்பு மைய சேவைகள் 022-68276827 24×7 செயல்படுகிறது. இச்சேவைகளை எட்டு பிராந்திய மொழிகளில் பெற இயலும். செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் எல்.ஐ.சி.மித்ரா 2.0 (CHAT BOT) பாலிசி சேவைகள் மற்றும் பாலிசி விவரங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
எல்.ஐ.சி.யின் வாட்ஸப் எண் 8976862090-ஐ வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி, பாலிசி விவரம், போனஸ் தகவல்கள், கடன் தகுதி, கடன் வட்டி செலுத்த வேண்டிய தேதி, ப்ரீமியம் செலுத்திய சான்றிதழ் மற்றும் யூலிப் பாலிசிகளின் தகவல்கள் ஆகியவற்றை பெறமுடியும்.
எல்.ஐ.சி.தென்மண்டலம், உரிமங்கள் அளிப்பதில் எப்பொழுதும் முன்னிலையில் செயல்பட்டு வருகிறது. எங்களது தென்மண்டலம் 30.09.2024 வரை ரூ.7533 கோடிகள் முதிர்வுரிமத் தொகையும், ரூ.723 கோடிகள் இறப்புரிமத் தொகையும் அளித்துள்ளது.
எல்.ஐ.சி.யால் துவக்கப்பட்ட எல்.ஐ.சி. கோல்டன் ஜூபிளி ஃபவுண்டேஷன் வறுமை ஒழிப்பு, கல்வி முன்னேற்றம் மற்றும் மருத்துவ வசதி போன்றவைகளில் உதவி வருகிறது. 30.09.2024 வரை தென்மண்டலம் 6 திட்டங்களின் மூலம் ரூ.4.20 கோடிகளை உதவித் தொகையாக வழங்கியுள்ளது.
30.09.2024 வரை, தென் மண்டலம், குழுக்காப்பீடு மூலம் 41,85,371 நபர்களுக்கு காப்பீடு வழங்கி ரூ.14672 கோடிகளை பிரீமிய வருமானமாகப் பெற்றுள்ளது.
எல்.ஐ.சி.தென்மண்டலம், 30.09.2024 அன்றுடன் முடிந்த அரையாண்டில், அனைத்து முக்கிய வணிக செயல்பாடுகளிலும் முதலிடத்தை பிடித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவைகளை அளிக்க, எல்.ஐ.சி. பல டிஜிட்டல் முன்னெடுப்புக்களை தொடங்கியுள்ளது.
அனைத்து இடங்களிலும் சேவைகள் எல்.ஐ.சி. வாடிக்கையாளர் போர்டல் மற்றும் எல்.ஐ.சி. டிஜிட்டல் செயலியின் மூலம் ஆன்லைனில் பிரீமியம் செலுத்துதல் வெளிநாட்டில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்காக எல்.ஐ.சி. NRI செயலி பற்று/கடன் அட்டை மூலம் பிரீமியம் செலுத்தும் வசதி NACH மற்றும் UPI செயலி மூலம் எளிதாக பிரீமியம் செலுத்தும் வசதி
சமீபத்தில் எல்.ஐ.சி., டிஜிட்டல் காப்பீட்டு தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும், விற்பனை பிரதிநிதிகள் மற்றும் கிளையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவும் வகையிலும், வரும் தலைமுறையினருக்கான டிஜிட்டல் இயங்குதளத்தை உருவாக்க இன்ஃபோஸிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப முன்னேற்றத்தின் உதவியுடன் மிகச்சிறந்த சேவையை அளிக்க எல்.ஐ.சி. புவனேஸ்வரில் சிறப்பு சோதனை மையத்தை உருவாக்கியுள்ளது.
எல்.ஐ.சி. பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வரும் அதே நேரத்தில் வாடிக்கையாளர் உள் நுழைவு முதல் உரிமத்தொகை வழங்குவது வரையான சேவை முறைகளையும் மேம்படுத்திக் கொண்டே வருகிறது.
வாடிக்கையாளர் சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தி வரும் நிலையில், மண்டல மேலாளர், எல்.ஐ.சி.யில் பணிபுரியும் அனைவரும் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகளை உள்ளடக்கிய தென் மண்டலத்திலுள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இன்றியமையாத தேவையான நிதிப்பாதுகாப்பை அளிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்.