செய்திகள் :

`டிரம்ப் மீம் காயின்' -கிரிப்டோ கரன்சி உலகிற்கு டிரம்பின் புதிய அறிமுகம்! | Trump Meme Coin

post image

ஆரம்பத்தில் கிரிப்டோ கரன்சிக்கு எதிர்ப்பாளராக இருந்த டிரம்ப், இன்று தனது பெயர் மற்றும் உருவத்துடன் புதிய கிரிப்டோ மீம் காயினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுக்குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில், 'என்னுடைய புதிய அதிகாரபூர்வ மீம் இதோ... என்னுடைய புதிய ஸ்பெஷலான டிரம்ப் கம்யூனிட்டியில் இணையுங்கள். உங்களுடைய டிரம்ப் கிரிப்டோ கரன்சியை இப்போது வாங்குங்கள்" என்று அவருடைய கிரிப்டோ மீம் காயினுக்கான லிங்கை பதிவிட்டுள்ளார்.

கிரிப்டோ கரன்சியின் ஆரம்பக்காலம் மற்றும் டிரம்பின் முதல் அதிபர் காலத்தில் கூட, டிரம்ப் கிரிப்டோ கரன்சி மற்றும் அதன் வளர்ச்சி மீது சந்தேகத்தில் இருந்தார். ஆனால், போக போக அதன் வளர்ச்சியைக் கண்ட டிரம்ப் தானே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து லாபத்தை அடைந்துள்ளார்.

இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் கூட, பிட் காயினுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அப்போது, 'பிட் காயினை விற்காதீர்கள்' அதன் மதிப்பு இன்னும் ஏறும் என்ற பொருளில் பேசினார்.

இன்னும் இரண்டு நாட்களில் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், அவர் அறிமுகப்படுத்தியுள்ள டிரம்ப் மீம் காயின் தாறுமாறாக விற்பனை ஆகும் என்றும், அதன் மதிப்பு அதிகளவில் எகிறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Elon Musk: `ட்விட்டரை வாங்கியதில் எலான் மஸ்க் மோசடி?' - வழக்கு தொடுத்துள்ள அமெரிக்க 'செபி' SEC!

'எலான் மஸ்க் அமெரிக்க பங்குச்சந்தையை ஏமாற்றியுள்ளார்' என்று அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற அமைப்பு. அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற கமிஷன் என்பது நம் நாட்டின்... மேலும் பார்க்க

Hindenburg: 'Bye' - மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்.. 'மிரட்டல் காரணமா?'- என்ன சொல்கிறார் நிறுவனர்?

2023-ம் ஆண்டு ஜனவரி மாதம், பல லட்சம் கோடி மதிப்புள்ள அதானியின் சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்தது ஒரு நிறுவனத்தின் அறிக்கை. அந்த நிறுவனம்தான் அமெரிக்காவை சேர்ந்த 'ஹிண்டன்பர்க் நிறுவனம்'.என்னதான் அதானி க... மேலும் பார்க்க

90 Hours Job: `L&T நிறுவன தலைவர் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது'- L&T HR சோனிக்கா விளக்கம்

சமீபத்தில் எல் அண்ட் டி (L&T) நிறுவனத் தலைவர் SN சுப்பிரமணியன், ‘வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்’ என்று கூறியது பெரும் பேசு பொருளாக மாறியது. இதற்கு முன்னர் கடந்த மாதம் இன்போசிஸ் (In... மேலும் பார்க்க

90 Hours Job : 'இயந்திரத்துக்கே மெயின்டெனன்ஸ் நேரம் தேவை... மனிதர்களுக்கு வேண்டாமா?!'

'வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்' என்று எல் அண்ட் டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியிருந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை.இதற்கு பலர் தரப்பினர்களிடம் எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டிருக்கும் ... மேலும் பார்க்க

90 Hours Work: '40, 48, 90 மணி நேரம் வேலை எல்லாம் வேண்டாம்...10 மணி நேரம் போதும்' - ஆனந்த் மஹிந்திரா

'வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். உங்களை (தொழிலாளர்களை) ஞாயிற்றுகிழமைகளில் வேலைக்கு வர வைத்தாலும் மகிழ்ச்சியடைவேன். எவ்வளவு நேரம் தான் நீங்கள் உங்கள் மனைவியை பார்த்துக்கொண்டு இருப்பீர்க... மேலும் பார்க்க