செய்திகள் :

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025 உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும் - இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் தனித்துவமான இந்த முன்னெடுப்பு புதிய மைல்கற்களை அடைந்துள்ளது.

2023-இல் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தொடங்கி, 2024-இல் 752 என வளர்ந்து, தற்போது 2025-ஆம் ஆண்டில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (தமிழில் இருந்து அயலக மொழிகளுக்கு 1005, அயலக மொழிகளில் இருந்து தமிழுக்கு 120) மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் தொகுப்பை மக்கள் புறக்கணித்துள்ளனர்: பிரேமலதா

இந்தச் சாதனைக்கும், தமிழிலக்கியம் உலக அளவில் கவனம் பெறவும் நமது திராவிட மாடல் அரசின் மொழிபெயர்ப்பு நல்கையும் ஆதரவும்தான் காரணம் எனத் தமிழ் அறிவுலகம் பாராட்டுகிறது. ஞானபீடம் அல்ல, நம் எழுத்தாளர்கள் நோபல் பரிசே பெற உயர்வுள்ளுவோம்!

இவ்வியத்தகு சாதனைக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2025 நிறைவு விழாவில், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது, உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தக கண்காட்சி சிறப்பு விருது, பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது, பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது, புத்தக ஊக்குவிப்பு விருது, உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் காலம் நீட்டிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இன்றுவரை 1.87(85%) கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார். திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல... மேலும் பார்க்க

ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்- கே. அண்ணாமலை

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது... மேலும் பார்க்க

சென்னையில் கூடுதல் புறநகர் ரயில் சேவை

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 20ஆம் தேதி தாம்பரம்-காட்டாங்குளத்தூர் இடை... மேலும் பார்க்க

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் மக்கள் புறக்கணித்துள்ளனர்: பிரேமலதா

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன... மேலும் பார்க்க

திமுக, நாதக வேட்பு மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழகர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு க... மேலும் பார்க்க