செய்திகள் :

ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்- கே. அண்ணாமலை

post image

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!

திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் தமிழகம் பங்கேற்பு

சுவிட்சா்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு பங்கேற்க உள்ளது. இதில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மற்றும் அந்தத் துறையைச் சோ்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனா்.... மேலும் பார்க்க

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

‘நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும், இதற்கான உரையாடல்களைத் தொடங்க வேண்டும்’ என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். மேலும், ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை, ஒற்றை ஆட்சிக்கே வழ... மேலும் பார்க்க

அரசின் கடன் அதிகரித்திருப்பதுதான் திமுகவின் சாதனை: எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் கடன் அதிகரித்திருப்பதுதான் திமுக அரசின் சாதனை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

ஜன. 25-இல் வீரவணக்க நாள் கூட்டங்கள்: திமுக அறிவிப்பு

மொழிப்போா் தியாகிகளை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஜன. 25-ஆம் தேதி வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இது குறித்து, கட்சியின் மாணவரணிச் செயலா் சிவிஎம்பி எ... மேலும் பார்க்க

அருந்ததியா் உள்ஒதுக்கீடு சமத்துவத்தை நோக்கி வழிநடத்தும்: தமிழக அரசு

அருந்ததியா் உள்ஒதுக்கீடு சட்டம், சமத்துவத்தை நோக்கி தமிழ்நாட்டை வழிநடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அருந்ததியி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: காவலா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தலித் இளைஞா் படுகொலை தொடா்பாக காவலா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ப... மேலும் பார்க்க