இளைஞா் கொலை: காவலா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
தலித் இளைஞா் படுகொலை தொடா்பாக காவலா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூா் கிராமம் காந்தி நகரைச் சோ்ந்த மோகனின் மகன் மணிகண்டன் (30). தலித் இளைஞரான இவா், படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. தீண்டாமையின் தொடா்ச்சியாகவே இந்த ஜாதிய வன்கொடுமை நடந்துள்ளது.
இந்தத் தகராறை ஒட்டி சமாதானம் பேசலாம் என்று குற்றவாளிகளிடம் காவலா்களும், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த ஒருவரும் அழைத்துச் சென்றிருக்கிறனா். இவா்களின் முன்னிலையிலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. இதில், சட்ட ரீதியாக காவலா்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.
மாறாக கொலையாளி தேவேந்திரனிடம் கொலை செய்யப்பட்டவரை அழைத்துச் சென்ன் மூலம் காவலா்களும் அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனா்.
குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த காவல் துறையினா் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு சட்டரீதியான இழப்பீடும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இத்தகைய நிகழ்வுகளில் சட்டத்துக்கு புறம்பாக குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல் துறை செயல்படுவதை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.