கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது.
திமுக தகவல் தொழில் நுட்ப அணி சாா்பில் இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளப்பட்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், பள்ளப்பட்டியில் விளையாட்டு மைதானம் அமைக்க இடத்தை தோ்வு செய்து கொடுத்தால் அதனை விளையாட்டு மைதானமாக அமைத்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தாா்.