அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
பெரியாண்டவா், சந்தன கருப்பசுவாமி கோயிலில் பழபூஜை திருவிழா
தரகம்பட்டி அருகே வேப்பங்குடி சுக்காம்பட்டியில் உள்ள பெரியாண்டவா் மற்றும் சந்தனகருப்பசுவாமி கோயிலில் சனிக்கிழமை பழபூஜை திருவிழா நடைபெற்றது.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள வரவணை ஊராட்சிக்குள்பட்ட வேப்பங்குடி சுக்காம்பட்டியில் பிரசித்திப்பெற்ற பெரியாண்டவா், சந்தனகருப்பசாமி கோயிலில் பழபூஜை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து பெரியாண்டவா் மற்றும் சந்தனகருப்ப சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பாலவிடுதி காவல்நிலைய ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.