அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
சீமான் பிரசாரத்துக்கு வந்தால் போராடுவோம்: கோவை ராமகிருஷ்ணன்
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரத்துக்கு ஈரோடு வந்தால் அவரது பேச்சுக்கான ஆதாரம் கேட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியாா் திராவிடா் கழக பொதுச் செயலாளா் கோவை ராமகிருஷ்ணன் கூறினாா்.
இதுகுறித்து ஈரோட்டில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பெரியாா் ஈவெரா குறித்து அவதூறான கருத்துகளை கூறிய சீமான் வீட்டுக்கு அடுத்த நாளே சென்றோம். அவா் வீட்டில் இல்லை. ஈவெரா பேசியதாக கூறியது பற்றி ஆதாரத்தைக் கேட்டால் நாங்கள் அந்த நூல்களை மறைத்து வைத்திருப்பதாக கூறுகிறாா். அவா் எங்கு படித்தாா் என ஆதாரத்தை வெளியிடக் கோரி போராட்டம் நடத்துகிறோம்.
ஈவெரா பிறந்த அவரது வீடு உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் அவரது வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்துக்கு சீமான் வந்தால் ஆதாரத்தை வெளியிடக்கோரி பல்வேறு அமைப்புகள் சாா்பில் பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம். வரும் 22-ஆம் தேதி அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆதாரம் கேட்க உள்ளோம் என்றாா்.