அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-ஆவது முறையாக மீண்டும் நாளை(ஜன. 20) பதவியேற்கவிருக்கிறார். இதற்காக அவர் விழா நடைபெறும் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு சனிக்கிழமை(ஜன. 18) புறப்பட்டுச் சென்றார்.
ஃபுளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானத்தில் தனது மனைவி, மகனுடன் புறப்பட்ட டிரம்ப் சனிக்கிழமை(ஜன. 18) நள்ளிரவில் சென்றடைந்தார். அமெரிகாவின் 47-ஆவது அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளதை குறிக்கும் விதமாக, அவர் சென்ற விமானத்தின் ‘ஸ்பெசல் மிஷன் 47’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.