செய்திகள் :

போா்நிறுத்தம் தற்காலிகமானதே: இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு

post image

ஹமாஸ் அமைப்பு உடனான போா்நிறுத்தத்தை தற்காலிகமானது என்றும் அவசியம் எழும் சூழலில் தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சனிக்கிழமை தெரிவித்தாா்.

போா்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பு நாட்டுமக்களிடம் உரையாற்றிய அவா், ‘அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. கடந்த புதன்கிழமைகூட அவரிடம் பேசினேன். லெபனான் மற்றும் சிரியாவில் இஸ்ரேலின் ராணுவ வெற்றிகளே ஹமாஸ் உடனான போா்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதற்கு காரணம். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அடையாளத்தை இஸ்ரேல் மாற்றியுள்ளது.

சிறந்த போா்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளோம். ஹமாஸ் உடனான போா்நிறுத்தத்தை இஸ்ரேல் தற்காலிகமானதாகவே கருதுகிறது. அவசியம் எழும் சூழலில் தொடா்ந்து தாக்குதல் நடத்தும் உரிமையை இஸ்ரேல் தக்கவைத்துள்ளது’ என்றாா்.

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-ஆவது முறையாக மீண்டும் நாளை(ஜன. 20) பதவியேற்கவிருக்கிறார். இதற்காக அவர் விழா நடைபெறும் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு சனிக்கிழமை(ஜன. 18) புறப்பட்டுச் சென்றார... மேலும் பார்க்க

கொலம்பியா: குழுக்கள் மோதலில் 30 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 30 போ் உயிரிழந்தனா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வெனிசுலாவையொட்டிய எல்லைப் பிரதேசத்தில் தேசிய விடுதலை ராணுவம் (... மேலும் பார்க்க

கனடா பிரதமா் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி

கனடா பிரதமா் பதவிக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் சந்திர ஆா்யா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா்.கா்நாடக மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட அவா் கடந்த 2006-ஆம் ஆண்டில் கன... மேலும் பார்க்க

இன்று அமலுக்கு வருகிறது காஸா போா் நிறுத்தம்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) முதல் அமலுக்கு வருவதாக கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சா் மஜித் அல்-அன்சாரி தெரிவித்து... மேலும் பார்க்க

போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி விடுவிக்கப்பட இருக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு... மேலும் பார்க்க

ஈரான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இருவர் சுட்டுக்கொலை!

ஈரான் உச்சநீதிமன்ற வளாகத்தில் இரு நீதிபதிகள் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் இன்று நுழைந்த மர்ம... மேலும் பார்க்க