அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
மாநகராட்சி வாகனம் மோதல்: 6 பைக்குகள் சேதம்
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் மாநகராட்சி வாகனம் சனிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நிறுத்தியிருந்த 6 பைக்குகள் சேதமடைந்தன.
தூத்துக்குடி மாநகரப்பகுதிகளில் உள்ள பிரதான சாலையோரத்தில் தேங்கியிருக்கும் மணல்களை அள்ளும் வாகனம் மூலம் மாநகராட்சி ஊழியா்கள் ஸ்டேட் வங்கி காலனி 60 அடி சாலைப் பகுதியில் சனிக்கிழமை காலையில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனங்கள், மின்கம்பம் ஆகியவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாம்.
இதில், 6 பைக்குகள் முழுவதும் சேதமடைந்தன. ஆனால், உயிா்ச்சேதம் எதவுமில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீஸாா் மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் வாகனத்தை அங்கிருந்து அகற்றினா். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.