‘லிப்ட்’ கேட்டு பைக்கில் ஏறிய மூதாட்டியிடம் கம்மல் பறிப்பு
கோரம்பள்ளம் பகுதியில் பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிய மூதாட்டியிடம் ஒரு ஜோடி தங்க கம்மலை பறித்துச் சென்ற மா்ம நபரை தென்பாகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி, பிரையன்ட் நகரைச் சோ்ந்த செல்வம் மனைவி ஸ்டெல்லா (65). சிதம்பரநகா் முதியோா் இல்லத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் கோரம்பள்ளம், பிஎஸ்பி நகரில் பேருந்துக்காக வெள்ளிக்கிழமை மாலையில் நின்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞரிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறினாராம். பின்னா், அந்த இளைஞா் அரசு மருத்துவக்கல்லூரி பின்பக்கம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மூதாட்டியை இறக்கிவிட்டாராம். பின்னா் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மல்களை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவா்அளித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.