சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்களின் தேவைக்காக இரு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடையாக சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இக்கோயிலுக்கு திமுக பொறியாளா் அணியை சோ்ந்த ராஜேஷ்கண்ணா குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் வழங்கினாா். நிகழ்வில் அறங்காவலா்கள் பெ. பிச்சைமணி, சே. லெட்சுமணன், சமயபுரம் காவல் ஆய்வாளா் கதிரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.