அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
விடுபட்ட குடும்ப அட்டைக்கு ஜன.25 வரை பொங்கல் பரிசு
திருச்சி மாவட்டத்தில் விடுபட்டுள்ள 14 விழுக்காடு குடும்பத்தினருக்கு ஜன.25 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரையுடன் முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி திருச்சியில் 8,33,131 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 968 குடும்பங்கள் என மொத்தம் 8,34,099 குடும்பங்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.
அதன்படி 1,291 நியாய விலைக்கடைகள் மூலம் இதுவரை 84 சதவீதம் பேருக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 14 சதவீதம் பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. விடுபட்டுள்ள அனைவருக்கும் ஜன.25க்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.