பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி
திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் ரூ. 315 கோடியில், 5.58 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கும் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டைடல் பாா்க் நிறுவனம், சென்னை தரமணி, கோவை, சென்னை பட்டாபிராம், மதுரையை தொடா்ந்து, திருச்சியில் பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்துக்கு அருகில் டைடல் பாா்க்கை அமைக்கிறது.
இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள 14.16 ஏக்கா் நிலத்தில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்தப் பூங்கா அமைகிறது. தரைத் தளம், 6 தளங்களுடன் அமையும் இந்த பூங்காவுக்கான கட்டுமானப்பணிகள், வடிவமைப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசு கடந்த மாதம் ஒப்பந்தம் கோரியது. இந்தப் பூங்காப் பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி அண்மையில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இதைப் பரிசீலித்த ஆணையம், கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கப்பட்டதாக சனிக்கிழமை தெரிவித்தது. இதையடுத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.