செய்திகள் :

தமிழின் பெருமையை பரப்புவதில் மைல்கல்: ஆளுநர் ஆர்.என்.ரவி

post image

யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா் சூட்டப்பட்டதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையத்தை "திருவள்ளுவர் கலாசார மையம்" என்று மறுபெயரிட்டிருப்பது, உலகம் முழுவதும் பழம்பெரும் வாழும் மொழி மற்றும் கலாசாரமான தமிழின் பெருமையைப் பரப்புவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல்லாகும்.

யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா்: பிரதமா் மோடி வரவேற்பு

இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பிரம்மாண்ட கலாசார மையம், கடந்த 2023, பிப்ரவரியில் அதிகாரபூா்வமாக திறக்கப்பட்டது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இக்கலாசார மையத்துக்கு திருவள்ளுவரின் பெயா் சனிக்கிழமை சூட்டப்பட்டது.

நெல்லைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிழக்கு த... மேலும் பார்க்க

மயிலாடுதுறை, நெல்லையில் 100 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! சாலைகளில் வெள்ளப்பெருக்கு

தமிழகத்தில் சனிக்கிழமை காலை தொடங்கி இன்று(ஜன. 19) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விபரத்தை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊத்து - 15 மி.மீ.ந... மேலும் பார்க்க

அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்

நிதி ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்த... மேலும் பார்க்க

பரந்தூர் போராட்டக் குழுவினருடன் தவெக தலைவர் விஜய் நாளை சந்திப்பு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினரை நாளை (ஜன. 20) தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 900 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை, தவெக ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை- இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழ்நாட்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜின் மகள்!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவா... மேலும் பார்க்க