மயிலாடுதுறை, நெல்லையில் 100 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! சாலைகளில் வெள்ளப்பெருக்கு
தமிழகத்தில் சனிக்கிழமை காலை தொடங்கி இன்று(ஜன. 19) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விபரத்தை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
ஊத்து - 15 மி.மீ.
நாலுமுக்கு - 14 மி.மீ.
காக்காச்சி - 12 மி.மீ.
தரங்கம்பாடி - 12 மி.மீ.
செம்பனார்கோயில் - 11 மி.மீ.
மாஞ்சோலை - 11 மி.மீ.
மயிலாடுதுறை - 10 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக நேற்று இரவு கன மழை பெய்ததால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அதேபோல, சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. இன்று(ஜன. 19) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்
பொன்னேரியில் - 7 மி.மீ.,
புழல் - 6 மி.மீ.,
தரமணி, செங்குன்றம், திருவொற்றியூர், ஆலந்தூர், மீனம்பாக்கம், அமைந்தகரை, பூந்தமல்லி, காஞ்சிபுரத்தில் - 5 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.