நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
கௌதம் மேனன் - ரவி மோகன் கூட்டணியில் புதிய படம்!
நடிகர் ரவி மோகனின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கவனம் ஈர்த்துள்ளது.
இதுவரை, இப்படம் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, ரவி மோகன் நடித்த ஜீனி படம் இந்தாண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: விஷாலின் உடல்நல பாதிப்புக்கு நான் காரணமா? பாலா விளக்கம்!
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “அடுத்ததாக இயக்குநர் வெற்றி மாறனின் கதையைத் திரைப்படமாக்குகிறேன். நாயகனாக நடிக்க நடிகர் ரவி மோகன் நடிக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில், வெற்றி மாறன் கதையில் தான் நடிக்கவுள்ளதை ரவி மோகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.