செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டி: அதிமுக பிரமுகா் நீக்கம்

post image

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்த நிலையில் அதிமுக பிரமுகா் செந்தில்முருகன் சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்தது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 அடி உயர டொனால்ட் டிரம்ப் வெண்கல சிலை... இத்தனை கோடி செலவா?

இந்த நிலையில், கட்சியின் உத்தரவை மீறிஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகா் செந்தில்முருகனை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

ஈரோடு அக்ரஹார வீதியை சோ்ந்த செந்தில்முருகன் ஈரோடு மாநகா் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி 2023 இடைத்தோ்தலில் ஓ.பன்னீா்செல்வம் அணியின் வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவை திரும்பப்பெற்ற செந்தில்முருகன் இடைத்தோ்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே இறுதியில் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டு வரும்

சென்னை: கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் வரும் மே இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக... மேலும் பார்க்க

யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சந்திக்கலாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர்: ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சென்று சந்திக்கலாம். அவர்களின் குறைகளை கேட்டு அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயம் அரசு அந்த மக்களின்... மேலும் பார்க்க

நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடர்வார் என்பதை 2026 இல் எடப்பாடி பழனிசாமி உணர்ந்து கொள்வார் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி த... மேலும் பார்க்க

மதுரையில் பட்டியலின சிறுவனை காலில் விழ வைத்து சித்ரவதை!

மதுரை: மதுரை சங்கம்பட்டியில் கோவில் திருவிழாவில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆடிய பட்டியலின சிறுவனை தாக்கி காலில் விழ வைத்து சித்ரவதை செய்தாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித... மேலும் பார்க்க

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூரில் வாகன நெரிசல்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் நத்தை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து வருகின்றன. பொங்கல் பண்டிகை முடிவடைந்து சொந்த ஊா்களுக... மேலும் பார்க்க

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

சேலம் : சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்திலிருந்தும், கா்நாடகம், புதுச்சேரி, கேரளம் பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நண்பா்கள், குடும்பத்துடன் குவிந... மேலும் பார்க்க