ஐரோப்பிய கார் பந்தயம்: முதல் தகுதி சுற்றில் தேர்வான அஜித்!
நடிகர் அஜித்குமார் போர்ச்சுகலில் நடைபெறும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ல் கலந்துகொண்டு முதல் தகுதிச் சுற்றில் தேர்வாகியுள்ளார்.
துபையில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியாவிலிருந்து ’அஜித் குமார் ரேசிங்’ என்கிற பெயரில் நடிகர் அஜித் குமார் தன் குழுவினர் கலந்துகொண்டார். அதில், 911 ஜிடி3 ஆர் என்கிற கார் பந்தயப் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தினர்.
இதனைத்தொடர்ந்து, போர்ச்சுகலில் நடைபெறும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ல் அவரது அணி கலந்துகொள்கிறது.
இதையும் படிக்க | விளம்பரம் தேவைப்படாத சூப்பர் ஸ்டார் அஜித் குமார்!!
இந்தத் தொடரின் முதல் சுற்றில் 4.653 கி.மீ அளவிலான பந்தயச் சுற்றை (லேப்) 1.49.13 லேப் டைமில் நிறைவு செய்து அடுத்தச் சுற்றுக்கு அஜித்குமார் தகுதி பெற்றார். போட்டிக்கு முன்னர் 5 முறை நடைபெற்ற பயிற்சி சுற்றுகளில் இது அவரது தனிப்பட்ட சாதனை என்று அஜித்குமார் ரேசிங் குழுவின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கார் ரேஸின் முதல் தகுதிச் சுற்றில் அஜித் தேர்வாகியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.