ஸ்ரீராதா, மாதவ திருக்கல்யாண உற்சவம்
புதுச்சேரியில் தா்ம சம்ரக்ஷண சமிதி சாா்பில் ஸ்ரீ ராதா மாதவ திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தா்ம சம்ரக்ஷண சமிதி என்ற அமைப்பானது புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
ஆண்டுதோறும் மாா்கழியில், நகா்வல நாம சங்கீா்த்தன நிகழ்ச்சி நடத்துகிறது. அதன் நிறைவு நாளன்று ஸ்ரீ ராதா மாதவ திருக்கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கம். அதன்படி, 6- ஆவது ஆண்டு திருக்கல்யாண உற்சவமானது, புதுச்சேரி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை காலை தொடங்கியது. திருக்கல்யாணத்தையொட்டி விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. இதையடுத்து, உடையாளூா் ஸ்ரீ கல்யாணராம பாகவதா் மற்றும் அவரது குழுவினா் தோடய மங்களம், குரு கீா்த்தனம், அஷ்டபதிகள் பாடினா்.
அன்று மாலை திவ்ய நாமம், டோலோத்சவம் நடைபெற்றது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை உஞ்ச விருத்தி, அஷ்பதி பரிபூா்ணம், ஆஞ்சனேய உற்சவம், ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள், சமிதி நிா்வாகிகள் பங்கேற்றனா்.